இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
லங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உடல் சிதறி பலியானார்கள், இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது.
உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பின் ஆழத்தைக்கூட என்னால் யூகிக்க இயலவில்லை. இறைவன் நம்முடன் இருப்பாராக. சில நாட்களுக்கு முன்னதாக நான் இலங்கையில் இருந்தேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் எங்கும் இவ்வளவு வெறுப்பு? மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது. மறைந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்’. இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.