நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து தமிழகம் வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்-நளினி உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ளனர். நளினி, முருகன் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக நளினி கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி ...
Read More »குமரன்
ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவிக்கிறது!
ஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது. கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ராஜினாமா ...
Read More »மஹிந்தவும் 13 பிளஸூம்
“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வாக்குறுதியளித்த, ‘13 ...
Read More »அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் இறந்த பெண்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் ...
Read More »புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!
கனடாவானது மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் முகமாக மேற்படி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அதிக தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மேற்படி நிதியிடலுக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்து ...
Read More »ரணலிடம் கோரிக்கை கடிதத்தை கையளிக்க உறுப்பினர்கள் தீர்மானம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை ஒன்றுக்கூட்டுமாறு கோரி கடிதமொன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க உள்ளதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுப்பாடுகள் தொடர்பில் வினவியப்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதபதி வேட்பாளராக ...
Read More »மாகாண, ஜனாதிபதித் தேர்தல்களை அண்மித்த திகதிகளில் நடத்த வேண்டும்!
மாகாணசபைத் தேர்தல்களையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றுக்கொன்று அண்மித்த திகதிகளிலேயே நடத்த வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் ஒரு தேர்தலின் முடிவு மற்றைய தேர்தலின் முடிவில் தாக்கம் செலுத்தும் நிலையேற்படும் என்று பெப்ரல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் செலவீனங்களை வரையறுக்கும் சட்டங்கள் எவையும் இயற்றப்படாமை நியாயமான தேர்தல் நடைமுறையைப் பாதிக்கின்றது. எனவே தேர்தல்களின் போது மேற்கொள்ளப்படும் செலவுகள் தொடர்பில் வரையறைகளை ஏற்படுத்துவதற்குரிய சட்டமூலம் ஒன்றினைத் தயாரித்திருக்கின்றோம். இதனை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க ...
Read More »பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி!
ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் ...
Read More »பாடகி ஆனார் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா!
ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேயலதாதா பீமண்ணா என்ற கன்னட படத்தில் முதன்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் திடீரென சினிமாவுக்கு வந்துள்ளார். நடிக்க வரவில்லை. பாடகியாக அறிமுகமாகியுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவரை பாட அழைத்தனர். அதன்பேரில் இந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார். இதுகுறித்து ரூபா கூறியதாவது:- ‘இது டூயட் பாடல் கிடையாது. ...
Read More »ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கேட்டார்!
அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ராணுவ கூட்டுப்பயிற்சியை தொடங்கி நடத்தி வருகின்றன. இதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிரவைத்தது. இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார். இதனால் வடகொரியா-அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ...
Read More »