குமரன்

படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்கு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்து, பின்னர் புதுச்சேரியில் முடித்துவிட்டு, தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ...

Read More »

சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது!

வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது என யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் மரணம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கருத்துவெளியிட்டுள்ளார் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சமூக விடயங்கள் குறித்த பிரகாஸ் ஞானப்பிரகாசத்தின் கரிசனை என்பது அவை குறித்துஅறிக்கையிடுவதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை,அநீதி வன்முறைகளை எதிர்கொள்பவர்களிற்கு ஆதரவளிப்பதற்காக அவர் குரல் கொடுத்தார் – பலரை தொடர்புகொண்டார். இவ்வாறான இழப்புகள் ...

Read More »

கொரோனாவுடன் இணைந்து ஜனநாயக நெருக்கடி நிலவுகிறது!

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் பல நெருக்கடிகள் உள்ள நிலையில், கொவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன பிரதானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் உட்பட பல சிக்கல் நிறைந்த பகுதிகள் ஒரு ஜனநாயக சமூகமாக இணைந்து வாழும் போது தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறை, பொருளாதாரத் ...

Read More »

தன்னந்தனியே அடைக்கலம் தேடி அவுஸ்திரேலியா சென்றுள்ள ஆப்கான் சிறுவர்கள்!

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார். பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என அமைச்சர் கரென் அன்ரூஸ் (karen andrews)தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை தாங்கள் பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது அவுஸ்திரேலியாவிற்கு தனியாக வந்த சிறுவர்ககளை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்ட அவர், மேலும் பலர் ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் -70 சதவீதமானோர் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுள்ளனர்!

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,288 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 70 சதவீதமாகிறது. தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘வெளியில் உடற்பயிற்சி செய்ய ஒரு மணி நேரம் மட்டும்’ என்ற வரம்பு நீக்கப்படுகிறது, மற்றைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். Bega, Cooma, மற்றும் Illawarra Shoalhaven Bomaderry ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

Read More »

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

ஒரு பக்கம் உயிர்ப்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகி இருக்கிறது. 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது. துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், ...

Read More »

பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்

சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 40. பல்வேறு இந்தி சீரியல்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, 2014-ம் ஆண்டு வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துனியா’ படம் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ...

Read More »

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதற்கு நிபந்தனைகளை முன்வைத்தார் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் ஜி.எல்.பீரிஸை சந்திக்கத் தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்த அழைப்பை ஏற்க சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என நம்புவதாக ஜி.எல்.பீரிஸுக்கு ...

Read More »

முடக்க காலத்திலும் நாயாற்றுக்கு படையெடுக்கும் தென்னிலங்கை மீனவர்கள்!

தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக நாயாற்றுப் பகுதி மீனவர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்கள் முடக்க நிலையையும் மீறி நுழைவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அழிவைத் தோற்றுவிக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறு முடக்க காலத்தில் நாயாற்றுப்பகுதிக்கு வருகைதரும் ...

Read More »

மாண்டவர்கள் மீண்டெழுதல்

1930 களில் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரிக்கு எதிராக இந்தியாவில்மகாத்மா காந்தி ஆரம்பித்த உப்பு சத்தியாக் கிரகபோராட்டம் எனப்படும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் போன்ற இலட்ச க்கணக்கான மக்கள் ஈடுபடுகின்ற குறிப்பிடத்தக்க மக்கள் இயக்கங்களால் மட்டுமே இலங்கையை மாற்ற முடியும். கொழும்பு பேராயர் கர்தினால்ம ல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு துயரத்திற்கு நீதி வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 21 ஆம் திகதி கறு ப்புக் கொடி ஏற் றுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு கத்தோலிக்கர்கள் கூட அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை . வெளிப்படையாக கர்தினால் ...

Read More »