மாண்டவர்கள் மீண்டெழுதல்

1930 களில் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரிக்கு எதிராக இந்தியாவில்மகாத்மா காந்தி ஆரம்பித்த உப்பு சத்தியாக் கிரகபோராட்டம் எனப்படும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் போன்ற இலட்ச க்கணக்கான மக்கள் ஈடுபடுகின்ற குறிப்பிடத்தக்க மக்கள் இயக்கங்களால் மட்டுமே இலங்கையை மாற்ற முடியும்.

கொழும்பு பேராயர் கர்தினால்ம ல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு துயரத்திற்கு நீதி வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 21 ஆம் திகதி கறு ப்புக் கொடி ஏற் றுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு கத்தோலிக்கர்கள் கூட அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை . வெளிப்படையாக கர்தினால் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் பலவீனமான அணுகுமுறை இந்த நிலைமைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இப்போதெல்லாம், இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்க வெறும் வேண்டுகோள் மட்டும் போதாது. வெகுஜன எதிர்ப்பு இயக்கங்களில் அவர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டுமானால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு அவசியம்.

பெறுபேறுகள் செய்யப்படும் வேலையின் அளவைப் பொறுத்ததாகும். இந்த வகையில் அரசியல் இயக்கங்களின் மவுனம் இத்தகைய செயல்களிலும் மதவாத அணுகுமுறைகளிலும் ஈடுபடுவதற்கான அவர்களின் அச்சத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

பெரிய விட யங்களைச் செய்ய வேண்டிய தேவைப்பாடு

இலங்கையின் பிரதிமையை சிறிய விட யங்களால் மாற்ற முடியாது மாறாக பெரிய செயல்களால் மாற்ற முடியும். ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரிக்கு எதிராக 1930 களில் இந்தியாவில் காந்தி தொடங்கிய உப்பு சத்தியாக்கிரகம் எனப்படும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல இலட்ச க்கணக்கான மக்கள் தீவிரமாகஈடுபடும் குறிப்பிடத்தக்க மக்கள் இயக்கங்களால் மட்டுமே இலங்கையை மாற்ற முடியும்.

ஆசிரியர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்று தருணத்தில் முக்கிய பங்கு வகித்த ஒரு நிகழ்வாக கருதப்படலாம். அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டைப் முடக்க முயற்சிப்போம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் விடுத்த அறிக்கைகள் , சவாலான போராட்டத்தின் வகைக்குள் உள்ளடங்கா விட்டாலும் சவாலான அறிக்கையாகக் கருதப்படலாம்.

கொழும்பு பேராயர்கர்தினால் ம ல்கம் ரஞ்சித்ஆண்டகை தொடங்கிய கறு ப்புக் கொடி இயக்கமும் ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கமாக முன்னுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கமுடியும்.. உயிர்த்த ஞாயிறு துன்பம் குறிப்பாக கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பாதித்த ஒரு நிகழ்வாகும் . குறைந்தபட்சம் இந்த இரண்டு சமூகங்களாவது ஒரு தீவிரமான போராட்டத்தை நடத்த ஊக்குவிக்கப்பட்டிருந்தால், அது பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு பாரிய எதிர்ப்பு இயக்கமாக மாறியிருக்கும்.

நெருக்கடிக்கு தீர்வுஎன்ன?

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி, , 2015 இல் செய்ததைப் போல ஒரு தேர்தலுக்காகக் காத்திருந்து மற்றொரு கட்சி அல்லது கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையா? இல்லை, இது மேலும்தாமதம் இல்லாமல் பொதுமக்களின் தலையீடு மூலம் தீர்க்கப்பட வேண்டிய நெருக்கடியாகும்.. இந்த வரலாற்று தருணத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒரு புதிய அரசியல் அமைப்பு உள்ளிட்ட நெருக்கடியை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு ரீதியானமறுசீரமைப்பு திட்டத்திற்கு தலைமைத்துவத்தை எடுக்கும் திறனும் சக்தியும் மக்களிடம் உள்ளது.

இறைமையின் உண்மையான உரிமையாளர்களாக இந்த வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு மக்களிடம் உள்ளது, அது நேரடி ஜனநாயக முறையில் செயற் படுத்தப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு உருவாக்கப்படும் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பைமேம்படுத்தும் பொறுப்பு பழைய மற்றும் புதிய அரசியல் கட்சிகளுக்கு இருக்கும்.

நெருக்கடியை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தை செயற் படுத்தும் பொறுப்பு மக்களிடம் இருக்க வேண்டும், பழைய சட்டவாக்க மன்றத்திடம் [பாராளுமன்றம் ] அல்ல, ஏனெனில் நாட்டின் தோல்விக்கு பழையபாராளு மன்றமே பொறுப்பேற்க வேண்டும். நெருக்கடியானது அவர்களின் திறமையற்ற ஆட்சியின் விளைவாக இருப்பதால், அதற்கு தீர்வுகாணும் திறன் அவர்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அரசியலமைப்பு கோட்பாட்டின் அடிப்படையில், இறைமை மக்களிடம் உள்ளது. இது பிரிக்க முடியாத சக்தி. ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தின் பிரிவு 25 ஆனது அரசியல்முறைமை சீரழிந்து நிலைகுலையும்போ து , நெருக்கடி நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிட மக்களுக்கு சட்டபூர்வ உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கிறது. பொதுமக்களுக்கு அத்தகைய உரிமை இருப்பதை சர்வதேச சட்டமும் அங்கீகரிக்கிறது. இந்த வகை யிலான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பல நாடுகளின் மக்கள் இந்த உரிமையை திறமையாக பயன்படுத்தியுள்ளனர். இலங்கையிலும் அதுதான் நடக்க வேண்டும்.

பழைய சட்டவாக்க மன்றம்

முன்மொழியப்பட்ட சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுக்கும் உரிமையை ஏன் பழையபாராளுமன்றம் இழந்தது என்பதை சுருக்கமாகக் கருத்தில் கொள்வது அவசியம். பழைய சட்டவாக்க மன்றத்தின் தலைவர்களும் பிரதிநிதிகளும் நாட்டில் இன, சாதி மற்றும் மத பிளவுகளை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவதற்கு அதிகளவுக்கு பங்களிப்பைவழங்கியிருந்தனர்., இது இறுதியில் பாரிய அளவில் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது.

மேலும் பழையபாராளுமன்றம் தன்னிச்சையாகவும் தொடர்ச்சியாகவும் அரசியலமைப்பை மீறும் கொள்கையைப் பின்பற்றியது, நாட்டின் அதியுயர் சட்டம் ஆட்சி முறைமையில் குழப்பத்தையும் சிதைவையும் ஏற்படுத்தியது. அரச தலைவர் சட்டத்திற்கு மேலாக வைக்கப்பட்டார், அதனால் அவர் சர் வாதிகாரத்தை பெற முடியும். மேலும், பழைய பாராளுமன்றத் தின் உறுப்பினர்கள் அரசதலைவர் மற்றும் ஆளுங்கட்சி தலைமையில் ஊழல் முறைமையை தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும்பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

நேரடி ஜனநாயகம்

தோல்வியின் உச்சத்தை அடைந்திருக்கும் இலங்கையை மீள உருவாக்கும் திட்டமானது மக்களால் ஏன் நேரடியாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் விளக்குவது முக்கியம்.

இலங்கை மக்களின் ஆன்மா சாதாரண நிலையில் இல்லை; அவர்கள் ஒரு கொடூரமானசூழலில் நீண்ட காலம் தொடர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அது சிதைந்த நிலையில் உள்ளது. சிங்கள தெற்கிலும் தமிழ் வடக்கிலும் வன்முறையை அடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வன்முறையின் போது இரு குழுக்களும் சமூகத்தின் மீது மிக அதிகளவு கொடுமையை கட்டவிழ்த்துவிட்டன. அதிக எண்ணிக்கையில் ரீதியாக ஆட்கள் கொல்லப்பட்டபோது, உயிர் பிழைத்த அனைவரும் உணர்வு ரீதியாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இறந்துவிட்டனர்.

தோல்வியடைந்த அரசு மற்றும் சமூகத்தில் விமர்சன நுண்ணறிவு இல்லாதமை என்பனவற் றா ல் , இலங்கை எதிர்கொள்ளும் இரண்டுபிரதான நெருக்கடிகள் இந்த சூழ்நிலையின் தவிர்க்க முடியாத விளைவுகளாகக் காணலாம். உள்நாட்டுப் போர் முடிவடை ந்த பிறகும், உள்நாட்டு சகோதர கலவரத்திற்கு வழிவகுத்த பிழைகள் சரி செய்யப்படவில்லை. மாறாக தமிழர்களை தற்காலிகமாக தாக்கும் கொள்கையாக மாறுவது இடம்பெற்றுள்ளது., இதனால் தமிழர்களின் பிரச்சினைசிதை வடைய விடப்பட்ட துடன் , முஸ்லிம்களை தாக்கும் கொள்கை உள்வாங்கப்பட்டது.

பழிவாங்குவதற்கு அடுத்த வரிசையில் கத்தோலிக்கர்கள் இருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒரே கல்லில் இரண்டு பறவைகளை கொல்லும் இரக்கமற்ற முயற்சியாக பார்க்க முடியும். இந்த மோசமான திட்டத்தின் முக்கிய நோக்கம் முதலில் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதலைத் தொடங்குவது மற்றும் முஸ்லிம்களைத் தாக்க அவர்களைத் தூண்டுவது, இதன் மூலம் இரு சமூகங்களும் ஒரே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குகிறது.

ஆனால் கத்தோலிக்கத் தலைவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த வலையில் விழ அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்ட விவேகமான அணுகுமுறை பெரும் பேரழிவைத் தவிர்த்தது. இச்சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களே .; ஆனாலும் இந்த சம்பவத்தால் சிங்கள பவு த்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கள ப வு த்த மக்களிடையே உருவாகிய குறிப்பிடத்தக்க மனநிலை இந்த அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியில் முக்கியமான காரணியாக இருந்தது.

இறந்தவர்கள் உயிர்த்தெழுதல்

சிங்கள பவு த்தர்களின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காகத்சிறுபான்மையினர் மீது அடக்குமுறை தொடரப்படுவதாகத் தோன்றும் வகையில் நடத்தப்பட்ட போதிலும், ஒரு இனக்குழு என்ற வகையில் சிங்கள பவு த்தர்களும் சலுகை மற்றும் சாதகமான நிலையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. , ஆனால் ஏமாற்றப்பட்டு அவமானப்படுத்தப்படும் அவல நிலையில்உள்ளனர்.. உணர்வு ரீதியில், சிங்கள பவு த்தர்களும் அதிக அளவில் மரணித்த நிலையிலேயே உள்ளனர்.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியைவெற்றிகொள்ள , சமூக உணர்வில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி அல்லது உணர்வு மரித்த நிலையை சமாளிக்க வேண்டியது அவசியம். சமூக உளவியல்ரீதியான கிளர்ச்சி வேண்டும். சமுதாயத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான விமர்சன நுண்ணறிவு, படைப்பாற்றல் மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் சமூக உணர்வை மூழ்கடிக்கும் மரணத்தின் நிலை மறைந்துவிடும்.

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக மக்கள் தங்கள் இறைமையை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் இது சமூக ஆன்மாவின் மரித்ததன்மையை குணப்படுத்துவதற்கான சிறந்த மருந்தாகும்.. தங்களுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து அவர்கள் தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும். இழந்த உரிமைகளை மீண்டும் பெற அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். நாட்டை விடுவிக்க மக்கள் தங்கள் இறைமையை தீவிரமாக பயன்படுத்த வேண்டும். அதற்காக செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் சட்டத்தின்படி மற்றும் வன்முறையற்ற முறையில் செய்யப்பட வேண்டும். இது ஒரு ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்பும் ஒரு சிறந்த நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட பொதுவான முன்முயற்சிகள் தேசிய அளவில் ஒரு பாரிய அடித்தளமாக மாற்றப்பட வேண்டும், இதில் சாதி வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாடுகள் ஒழிக்கப்படுகின்றன, இனக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு ஆகியவை சமமாக வளர்க்கப்படுகின்றன. உரிமைகள் மற்றும் மனிதகவுரவம் அனைத்து பிரஜைகளுக்கு பாரபட்சம் அல்லது தப்பபி ராயம் இல்லாமல் உறுதி செய்யப்படும்.

மக்களால் ஒரு நேரடியான ஜனநாயக செயல்முறையை உள்வாங்கிக் கொள்வது அல்லது அவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஜனநாயகமுன் மாதிரியை வழங்குவது 21 ஆம் நூற்றாண்டில் முழுமையான அழிவு, வீழ்ச்சி அல்லது தோல்வி நிலைக்கு வீழ் ந்துள்ள நாடுகள் அல்லது அரசுகளை மீண்டும் உருவாக்குவதற்கான சிறந்த முறையாகும். நிக் கர குவா, உகாண்டா, பிரேசில், தென்னாபிரிக்கா, ருவாண்டா, கென்யா மற்றும் நேபாளம் இந்த செயல்முறையை ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்ற நாடுகளாக கருதப்படலாம்.

இந்த விடயம் இலங்கைக்கு இன்னும் புதியதாகும்.. இலங்கையில் உள்ள அரசியல் ஸ்தாபனம் இந்த விட யத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இறுதிப் பகுப்பாய்வில் இலங்கை தேர்வு செய்ய வேண்டிய பாதை இதுதான்.

விக்டர் ஐவன்

பினான்சியல் டைம்ஸ்
LINK- FINANCIAL TIMES
Resurrection of the dead