ஷங்கரின் மகள் அதிதியை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என ‘விருமன்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன். இயக்குநர் ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவுக்கு புது வரவு. ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி டாக்டருக்கு படித்த கையோடு, சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். சென்னையில் நேற்று காலை நடந்த ‘விருமன் பூஜையில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்று அதிதியை வாழ்த்தியிருக்கிறார்கள். ஷங்கரின் மகளை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என ...
Read More »குமரன்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி வருகிற 20-ந் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் ...
Read More »‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
மோகன் ஜி – ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ...
Read More »இந்தியா உலகின் சிறந்த அணி – ஆ ஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே புகழாரம்
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என வார்னே கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. ...
Read More »மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்!
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது ...
Read More »மற்றுமொரு வைத்தியரும் விலகினார்!
சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றொழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார். இந்தக் குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை என்பதால், அக்குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக, பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்!
வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார். தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ...
Read More »தமிழ் அகதி தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து
ஆஸ்திரேலியா: தமிழ் அகதி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவில் நாடுகடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகளான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் Bring Priya, Nades and their girls home to Biloela எனும் சமூகக்குழு ‘பிரியா- நடேசலிங்கம்’ தம்பதியினரின் 8வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘இத்தமிழ் அகதி குடும்பம் அச்சுறுத்தல் மிகுந்த இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது, அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்’ என்பது அக்குழுவின் கோரிக்கையாக உள்ளது. ...
Read More »மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை ...
Read More »ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம்!
தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிய குடும்பம் ஒன்று தங்கள் 17 வயது மகன் தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ளதாகவும் தாலிபான் படையினரால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அச்சம் தெரிவித்துள்ளது. “அவன் காபூலில் தன்னந்தனியாக இருக்கிறான். காபூலை தாலிபான் கைப்பற்றியதால் மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறான். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் அவரது தந்தை கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை விட்டு ஆஸ்திரேலிய ...
Read More »