நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Eelamurasu Australia Online News Portal