தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது என்று கூறியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன். சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும். எனக்கு ...
Read More »குமரன்
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை கேலி செய்த நபர்!
அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நான்கு காவல் துறை அதிகாரிகளை காப்பாற்றாமல் கேலி செய்த நபர் தற்போது விசாரணை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாத இறுதியில் இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கொண்ட ஒரு காவல் துறை குழு, அசுர வேகத்தில் பறந்த ஒரு போர்ஷே வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். விசாரணையில் 41 வயதான Richard Pusey என்ற அந்த நபர் அதிகமான போதைமருந்தும் உட்கொண்டிருந்தது ...
Read More »ட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்
சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது. அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழக்கமான ஊதியமே வழங்கப்படும் என்றும் ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. அலுவலகம் வராமலேயே செய்யக்கூடிய பணியில் உள்ளவர்களுக்கு ...
Read More »தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய விஷால்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தன் அம்மாவின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவி செய்துள்ளார். கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். ...
Read More »தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மே 4ஆம் திகதியன்று, அலரி மாளிகையில் கூட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு புறமிருக்க, அதை கூட்டிய பிரதமரோ, அரசாங்கமோ என்ன தான் சாதித்திருந்தன? கூடினார்கள், சுகாதார அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் கொவிட்- 19 தடுப்புக்காகத் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். பலர், கொவிட்-19 தடுப்பு விடயத்தில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கத்தைப் பாராட்டினார்கள்; அவ்வளவுதான்; கலைந்து சென்றார்கள். அதிலிருந்து 10 நாள்கள் ...
Read More »சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாக பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகாமையிலையே குறித்த உருவ பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படிருந்த வேளையிலையே இனம் தெரியாத நபர்களால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து வீதியோர மின் கம்பத்துடன் உருவ ...
Read More »செம்மணியில் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பமாகவிருந்த வேளை அப்பகுதிக்கு வந்திருந்த , யாழ்ப்பாண காவல் துறையினர் நிகழ்வினை நடாத்த விடாது தடைகளை ஏற்படுத்தும் முகமாக அஞ்சலி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை அப்புறப்படுத்த முனைந்தனர். அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், ”நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்” என கூறி நிகழ்வினை ஆரம்பிக்க முயற்சிக்கப்பட்டது. ...
Read More »போர் கதையில் நடிக்க அதர்வா ஆசை
வாரிசு நடிகராக இருப்பதில் நல்லது, கெட்டது என இரண்டும் உள்ளது என்கிறார் நடிகர் அதர்வா. ஒருவர் இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படும்போது எளிதாக ரசிகர்களைச் சென்றடைய முடிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கு எப்போதுமே அப்பாதான் முதன்மை நாயகன். அவரது நற்பெயரை நாமும் பெறுவது என்பது மிகப்பெரிய சவால். அதை சாதித்துக் காட்டுவது சுலபமல்ல. அப்பா காதல் நாயகனாகப் பேசப்பட்டார் எனில் எனக்கு காதல் கதைகளுடன் சவால் மிகுந்த கதாபாத்திரங்களும் பிடித்தமானவை. குறிப்பாக விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகள் ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் ‘ஈட்டி’. ...
Read More »என் மகன் கடத்தப்பட்டதாக பயந்தேன்…. நடிகர் பிருத்விராஜின் தாய் உருக்கம்
கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் ஜோர்டானில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் கடத்தப்பட்டதாக பயந்ததாக அவரது தாய் தெரிவித்துள்ளார். தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிருத்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு வரும்படி திரையுலகினர் விடுத்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டது. பாலைவன பகுதியில் நல்ல உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக ...
Read More »சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவித்தல் !
கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
Read More »