சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.
ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்கள் இவ்வருட இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அந்நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.
அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழக்கமான ஊதியமே வழங்கப்படும் என்றும் ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. அலுவலகம் வராமலேயே செய்யக்கூடிய பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும்.
கொரோனா அச்சுறுத்தலால் ட்விட்டர் அலுவலகம் மூடப்பட்டு தற்போது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பரில் அலுவலகத்தை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட் நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிவரை தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal