குமரன்

முல்லைத்தீவு காட்டில் துப்பாக்கி வெடித்து சிதறியதில் முகம் சிதைந்த இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மீட்கப்பட்டுள்ள இந்த சடலம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 வயதான இளைஞர் என முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எப்படி இடம்பெற்றது என காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் ...

Read More »

பத்திரிகை அலுவலகத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவர் கைது!

அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை காவல் துறையினர்  கைது செய்தனர். அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாகாவல் துறை நகரில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அங்கு ஒரு மர்ம வாலிபர் புகுந்தார். செய்தி அறை பகுதிக்குள் நுழைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அந்த நாட்டு கல்வி மந்திரி சைமன் பிர்மிங்காமை அடிலைடில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு கல்வி நிறுவனங்களின் பரஸ்பர பங்களிப்பு, பள்ளிக்கல்வி கொள்கையில் ஒத்துழைப்பு, ஆன்லைன் கல்வி, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை ...

Read More »

கதாநாயகியான திருநங்கை அஞ்சலி!

ராம் இயக்கத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலி அமீர் என்ற திருநங்கை கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அஞ்சலி அமீர் கேரளாவை சேர்ந்தவர். மம்முட்டி பரிந்துரையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே மோகன்லாலுடன் ஸ்வர்ணபுரு‌ஷன் என்ற மலையாள படத்தில் அஞ்சலி அமீர் நடித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. பேரன்பு படம் முடிந்து உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. கதாநாயகியானது குறித்து திருநங்கை அஞ்சலி ...

Read More »

‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன்’!

ஜி.நாகராஜன் தன் மரணப் படுக்கையில் கடைசியாக உச்சரித்தது, ஷெல்லியின் கவிதை வரிகள்: ‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன்! ரத்தம் வடிக்கிறேன்…’. இதை அவர் சொன்னபோது, நான் அருகில் இருந்தேன். அவருடைய வாழ்க்கை பற்றிய தீர்க்கமான சுய அவதானிப்பு. இதை என்னிடமோ, அருகில் இருந்த மற்றொரு நண்பரான சிவராமகிருஷ்ணனிடமோ அவர் சொன்னதாகத் தெரியவில்லை. தன் வாழ்வின் பிரகடனம்போல் இதை உச்சரித்துவிட்டுக் கண் மூடியவரின் உயிர், அந்த இரவின் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்தது. 1981-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலையில் மதுரை அரசு ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல திட்டமிட்டிருந்தவருக்கு சிறை!

சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல  திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட  மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்  காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது. குறித்த வழக்கு காலி பிரதான நீதவான், ஏ.நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி,  சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு  இவர்கள் அழைத்துச் செல்லவிருந்த நிலையில், காலி தெற்கு கடற்படை  முகாம்  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ...

Read More »

‍றெஜீனாவுக்கு நீதி வேண்டி இன்றைய தினமும் போராட்டம்!

சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இன்றை தினம் வடக்கில் முழு நிர்வாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வழமையான சூழ்நிலையே காணப்படுகிறது. நேற்றைய தினம் இச் சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதில் மேலும் சிக்கல் நிலை!

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் points system இல் மாற்றம் ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட நபர் ஒருவர் பல துறைகளில் Skilled Migration ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும். இந்த நிலையில் இம்முறைமையானது எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதியிலிருந்து இது 65 புள்ளிகளாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 30 ஆம் திகதி ...

Read More »

பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் கைது! -ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். நேற்று (28)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார். இராணுவத்தின் ...

Read More »

மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் எது?

`நம் எல்லோரிடமுமே பச்சாதாபப்படும் குணம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். என்ன… அதை வெளிப்படுத்தத்தான் போதுமான தைரியம் இல்லை’ – இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்கக் கவிஞரும் மனித உரிமைப் போராளியுமான மாயா ஏஞ்சலோ (Maya Angelou). மற்றவர்களின் மனமறிந்து நடப்பது, பிறருக்காக இரக்கப்படுவது என்பது மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். மற்றவர்களுக்காகப் நாம் இரங்கும்போது, அவர்களின் எதிர்மறை சக்தி விலகி, பாசிட்டிவ்வான சக்தி அவர்களை ஆட்கொள்ளுகிறது. `நமக்காக இரக்கப்படவும், நம்மை நினைத்துப் பார்க்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது’ என்கிற எண்ணமே பெரிய பலத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடும். ...

Read More »