அவுஸ்திரேலியாவின் கல்கூர்லி (Kalgoorlie) பகுதியை சேர்ந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. தங்கச் சுரங்கத்திற்கு அருகே உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 100,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டி ஒன்றை குறித்த நபர் தோண்டியெடுத்துள்ளார். பொழுதுபோக்குக்காக எதையோ தேடிச் செல்லும் போது குறித்த எதிர்பாரா விதமாக அந்தப் பரிசு கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அவுஸ்திரேலியாவில் தோண்டியெடுக்கப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது. அதனால் அங்கு அவ்வப்போது சிறு சிறு தங்கக் கட்டிகள் மக்களுக்குக் கிடைப்பது வழக்கம் ...
Read More »குமரன்
இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர கூப்பி நமஸ்தே சொல்கிறேன் ! அமலாபால்!
அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ ...
Read More »எப்.பி.ஐ. உள்ளிட்ட ஒன்பது சர்வதேச சிறப்பு விசாரணை குழு களத்தில்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந் ...
Read More »அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்!
சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதேவேளை இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் டொஷிஹிரோ கிடமுறவுடனான சந்திப்பொன்றையும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட நேற்யை தினம் மேற்கொண்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜப்பானிய பிரதித் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ...
Read More »இந்தோனேசியாவில் வன்முறை!- 20 பேர் கைது!
இந்தோனேசியாவில் அதிபர் விடோடோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் ...
Read More »அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளையடுத்து ஆறு அகதிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!
மனுஸ் தீவுகளிலும் நவ்றுவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மனுஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான நோய்வாய்ப்பட்டுள்ள நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார். சூடானை சேர்ந்த அகதி அப்துல் அசீஸ் முகமட் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் பதிவு ...
Read More »இராஜினாமா செய்யத் தயார் – ரிஷாத்
சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனத்தில் அமர்வதற்கு தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ...
Read More »தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஆராய குழு!
கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்றைய தினத்திலேயே குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுக்குழுவில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை! ...
Read More »ஐஸ்வர்யா ராய் பற்றிய சர்ச்சை ட்விட்!
விவேக் ஓபராய் பதிவிட்ட ட்விட், சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார். வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வெளியிட்டன. தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகளின்படி ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு களை விமர்சிக்கும் ...
Read More »