கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்றைய தினத்திலேயே குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெரிவுக்குழுவில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal