குமரன்

லைகாவுக்கு கமல் கடிதம்!

இந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ...

Read More »

டெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை!

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ...

Read More »

எனது அழகுக்கு அவர்கள் தான் காரணம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, பின்னர் அஜித், விஜய், சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- “சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எனது பெற்றோர்கள்தான் ...

Read More »

தெற்காசிய பிராந்திய ஒருமைப்பாடு எதில் தங்கியிருக்கிறது?

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) மிகவும் உயர்ந்த மட்டங்களில் முழுமையாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாக மாறுவதிலேயே பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிராந்திய ஒருமைப்பாடு வெற்றிகரமானதாக அமைய முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னிந்திய நகரமான பெங்களுருவில் ஞாயிறன்று தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததையடுத்து 2017 காத்மண்டு சார்க் உச்சிமாநாடு ஒத்தி வைக்கப்பட்டமை இந்தப் பிராந்திய அiமைப்பை ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று கூறிய விக்கிரமசிங்க பிராந்திய நாடுகள் கேந்திர முக்கியத்துவ ரீதியிலும் ...

Read More »

கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்கள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இராணுவத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர்  ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு ...

Read More »

பகிடிவதை விசாரணை அறிக்கை!

யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட ...

Read More »

சீனாவுக்கு சென்றோருக்கு நியூஸிலாந்துக்கு வரத் தடை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நியூஸிலாந்து தனது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் எட்டு நாட்களுக்கு நீடித்து வைத்துள்ளது. அதன்படி கடந்த 14 நாட்களில் சீனாவின் பிரதான நிலப்பகுதிகளுக்கு சென்ற அனைத்து வெளிநாட்டினக்கும் நாட்டுக்குள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சீனாவுக்கு பயணித்த நியூஸிலாந்துக் பிரஜைகளுக்கு நாட்டுக்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நாட்டுக்கு வரும் அவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் ...

Read More »

சிட்னியில் புகையிரதத்திலிருந்து பெட்டிகளிற்கு கீழே விழுந்த கைக்குழந்தை…!

சிட்னியின் வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து விழுந்த நிலையில் புகையிரதத்தின் அடியில் சிக்குண்ட கைக்குழந்தையை மூவர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பலரின் மனதை தொட்டுள்ளது. இன்று காலை வூலி கிறீக் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திலிருந்து கைக்குழந்தையொன்று விழுந்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் தாயார் தவித்தவேளை மூவர் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் குவித்து பெட்டிகளின் கீழே சிக்குண்டிருந்த குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். ஏனைய பயணிகள் தாய்க்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவேளை குழந்தைமீட்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் குழந்தையை மீட்டுவிட்டனர் என பயணியொருவர் தெரிவிப்பதை காண்பிக்கும் ...

Read More »

நியூசிலாந்து இமாலய வெற்றி…!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து ...

Read More »

தேர்தல் களத்துக்கான புதிய வழிகாட்டி!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியின் மூலம், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, கெஜ்ரிவால் எடுத்த முயற்சிகளுக்கு, விவரமுள்ள வாக்காளர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு, இந்தியாவில் மாற்று அரசியலைக் கொடுக்க முனைபவர்கள் மீதும், மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கிறது. கடந்த காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக, மாநிலக் கட்சிகள் தோன்றினாலும், டெல்லியில், காங்கிரஸ், பா.ஜ.க முன்னெடுத்துச் செல்லும் ...

Read More »