பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார். பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். ‘உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, ...
Read More »குமரன்
சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்!
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் ...
Read More »உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- ஒரு பெண் உட்பட இருவருக்குப் பிணை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ;ஏனைய 59 பேரின் விளக்க மறியல் அடுத்த மாதம் 24 திகதி வரை வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 கைது செய்யப்பட்ட ...
Read More »‘கோவிட்-19’ உலகம் எப்படி எதிர்கொள்கிறது?
சிங்கப்பூர்: வைரஸ் தாக்கியவர்கள், நோயின் தீவிரத்துக்கேற்ப நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சிகிச்சையும் தொடர்கிறது. காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் செல்வதையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் சிங்கப்பூர் அரசு ஊக்குவிக்கிறது. மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரித்து இதன் தீவிரத்தை உணர்த்துகிறது. முகக் கவசம் உள்ளிட்டவற்றை விலை உயர்த்தி விற்கக் கூடாது, பதுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை அவர்கள் குணமாகும் வரை எல்லா நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பொதுப் ...
Read More »பீதி காரணமாக தனிமையில் பிரார்த்தனை நடத்திய போப் ஆண்டவர்!
வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கொரோனா பீதி காரணமாக தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார். சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு ...
Read More »விஜய்சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!
தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், படங்கள் நடிப்பதில் விஜய்சேதுபதியை மிஞ்சியுள்ளார். தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் ...
Read More »ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வழக்கு விசாரணை இன்று!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் ; (30.07) ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து இன்றையதினம் (10.09) மன்றில் ஊடகவியலாளர் மற்றும் குறித்த முறைப்பாடு செய்த கடற்படை சிப்பாய் ஆகியோரை ; ஆஜராகுமாறும் அத்தோடு பொலிசாரை மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் ஏற்கனவே நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை ...
Read More »சீனாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்பை சந்தித்த இத்தாலி!
சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசுக்கு அதிக மக்கள் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். சீனாவுக்கு வெளியே கொரோனா ...
Read More »நிரம்பி வழிந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்!
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் ...
Read More »இனியும் ‘உக்கிய’ முடிவுதானா?
அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தமது அரசியல் நலன்கள் சார்ந்தும், தங்களது இருப்பின் மீதான வலுவை ...
Read More »