உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- ஒரு பெண் உட்பட இருவருக்குப் பிணை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ;ஏனைய 59 பேரின் விளக்க மறியல் அடுத்த மாதம் 24 திகதி வரை வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜயர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் 5 பேரை பிணையில் விடுவிக்கப்பட்டநிலையில் தொடர்ந்து 59 பேர் விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ள இவர்களை இன்று 10 திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவந்து நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.