தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டியில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்கா-அவுஸ்ரேலியாஅணிகள் இடையேயான 5-வது ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவில் தசரா கொண்டாட்டங்கள் களை கட்டின
அவுஸ்ரேலியாவின் ஆகப்பெரிய இந்துக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் 22 ஏக்கர் பரப்பளவில் 4.5 மி. அவுஸ்ரேலிய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்துள்ள அந்தக் கோயிலில் 5 டன் எடையுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கடவுளர்களின் சிலைகளும் உள்ளன. அவுஸ்ரேலியாவில் இருக் கும் 430,000 இந்தியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்டங்கள் களை கட்டின.
Read More »எலெக்ட்ரான் மூலம் காயங்களை விரைவில் ஆற்றும் புதிய முறை
எலெக்ட்ரான் மூலம் மனித உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் புதிய முறையை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவிகள் உடல் வெப்பத்தின் மூலம் இயங்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலின் வெப்பத்தால் இதில் உள்ள எலெக்ட்ரான்கள் தூண்டப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் உடலின் செல் வளர்ச்சியை அதிகப்படுத்தி, காயங்களை விரைவில் ஆற்றும் வகையில் ...
Read More »தென் சீனக் கடல் விவகாரம் முறையாக கையாளப்படாவிட்டால் ஆபத்து
சீன தலைநகர் பீஜிங்கில் 7-வது ஜியாங்ஷன் பிராந்திய பாதுகாப்பு மன்ற கூட்டம் இன்று (11) நடைபெற்றது. புதுவகையான சர்வதேச உறவுகளை உருவாக்குவது கூட்டத்தின் மையமான கருத்தாக இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்ரேலிய முன்னாள் பிரதமர், “தென் சீனக் கடல் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அமெரிக்கா-சீனா இடையே சிக்கலாக மாறும். இந்த பிரச்சனைகள் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது” என்றார்.
Read More »ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’
ஜோதிகாவின் அடுத்த படம் ’மகளிர் மட்டும்’. குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட்டர் மற்றும் தலைப்பை பார்க்கும் போதே ஜோ ‘ஒன் உமேன் ஷோ’ நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிப்பு. படத்தில் பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், லிவிங்ஸ்டன் என க்ளாசிக் படையே உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
Read More »அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்களின் ஆய்வு
‘மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்’ என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அவுஸ்ரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை ...
Read More »அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பில் வௌிவந்த உண்மை?
கிரிக்கட் பந்து தலையை தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய அணி வீரர்பி லிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நீண்ட விசாரணைகளின் பின்னர் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் மரணம் தொடர்பில் 5 நாள் ஜூரி குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் , இதன் போது பந்து தலையை தாக்கிய நொடி முதல்பி லிப் ஹியூஸின் மரணத்திற்கான செயன்முறை ஆரம்பித்து விட்டதாக தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சிட்னி நகரில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது பந்து தலையை தாக்கிய நிலையில் , மருத்துவமனையில் ...
Read More »அவுஸ்ரேலியாவிற்கு சிங்கப்பூர் பிரதமர் பயணம்
அதிகாரபூர்வப் பயணம் அவுஸ்ரேலியத் தலைநகர் கேன்பராவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் இன்றிலிருந்து வியாழன் வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூருக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடையே முதல் முறையாக நடத்தப்படும் முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் அவுஸ்ரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல்லுடன் பிரதமர் லீயும் கலந்து கொள் கிறார். அவுஸ்ரேலிய நாடாளு மன்றத்தில் திரு லீக்கு அதிகார பூர்வ வரவேற்பு வழங்கப்படும். தலைமை ஆளுநர் பீட்டர் கோஸ்கிரோவ், பிரதமர் டர்ன்புல், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன், ஆஸ்திரேலியத் தலைநகர முதல்வர் ஆண்ட்ரூ பார் ஆகியோரைத் ...
Read More »புகலிடம் கோருவோர் அறிந்திருக்க வேண்டியவை
தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறையில் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் பற்றிய விரிவான விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்விhttp://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/trrkaalik-paatukaappu-viicaa-kurrittu-puklittm-kooruvoor-arrintirukk-veennttiyvai?language=ta
Read More »சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.800 கோடி அபராதம்
SAMSUNG ஆப்பிள் – சாம்சங் நிறுவனங்களுக் கிடையிலான வழக்கில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை மீறல் காரணமாக ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 கோடி டாலர் (சுமார் ரூ.800 கோடி) அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களுக்கிடை யிலான இந்த வழக்கில் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதற்கு எதிராக ஆப்பிள் மேல் முறையீடு செய்திருந்தது. சாம்சங் நிறுவனம் தங்களது காப்புரிமையான ...
Read More »