கிரிக்கட் பந்து தலையை தாக்கியதில் உயிரிழந்த அவுஸ்திரேலிய அணி வீரர்பி லிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நீண்ட விசாரணைகளின் பின்னர் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரின் மரணம் தொடர்பில் 5 நாள் ஜூரி குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் , இதன் போது பந்து தலையை தாக்கிய நொடி முதல்பி லிப் ஹியூஸின் மரணத்திற்கான செயன்முறை ஆரம்பித்து விட்டதாக தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி சிட்னி நகரில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியொன்றின் போது பந்து தலையை தாக்கிய நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிலிப் ஹியூஸ் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார்.
அவரது மரணத்தை தடுத்திருக்க முடியுமா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே புதிய ஜூரி சபையின் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
பந்து தலையை தாக்கிய நொடி முதல் எவ்விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பிலிப் ஹியூஸின் மரணத்தை தடுத்திருக்க முடியாது என நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்களை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal