அதிகாரபூர்வப் பயணம் அவுஸ்ரேலியத் தலைநகர் கேன்பராவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் இன்றிலிருந்து வியாழன் வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூருக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடையே முதல் முறையாக நடத்தப்படும் முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் அவுஸ்ரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல்லுடன் பிரதமர் லீயும் கலந்து கொள் கிறார்.
அவுஸ்ரேலிய நாடாளு மன்றத்தில் திரு லீக்கு அதிகார பூர்வ வரவேற்பு வழங்கப்படும். தலைமை ஆளுநர் பீட்டர் கோஸ்கிரோவ், பிரதமர் டர்ன்புல், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன், ஆஸ்திரேலியத் தலைநகர முதல்வர் ஆண்ட்ரூ பார் ஆகியோரைத் திரு லீ வெவ்வேறு நேரங்களில் சந்தித்துப் பேசவிருப்பதாகப் பிரதமர் அலுவலக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
பிரதமர் லீ அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பேச இருக் கிறார். அவுஸ்ரேலிய நாடாளு மன்றத்தில் சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் பேசுவது இதுவே முதல்முறை. அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலியப் பிரதமர் திரு லீக்கு அதிகாரபூர்வ விருந்து வழங்கி சிறப்பிப்பார்.
Eelamurasu Australia Online News Portal