அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவுஸ்ரேலிய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வந்து விளையாட ...
Read More »குமரன்
இந்தியாவிற்கு எதிராக அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம்: லயன்
இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்திகதி முதல் 8-ந்திகதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்திகதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்திகதி முதல் 29-ந்திகதி வரை தரம்சாலாவிலும் ...
Read More »தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது- ரஜினிகாந்த்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து ரஜினி கூறுகையில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் ...
Read More »மூன்று கால்களுடன் இளம்பெண்
காட்சிப் பிழை என்பதன் நவீன பிரதிபலிப்பாக மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளவாசிகளை மண்டையை பிறாண்டிக் கொள்ள வைத்துள்ளது. சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனதுடன் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. காரணம், அதில் காணப்படும் பெண் மூன்று கால்களுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிப் பிழையால் ஏற்படும் மாயத் தோற்றம் என்பது அந்தப் படத்தை மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தப் பின்னரே புலனாகிறது, அந்தப் பெண்ணின் வலதுபுறத்தில் தோன்றும் மூன்றாவது கால், அவருக்கு சொந்தமானது அல்ல, அவர் கையில் பிடித்திருக்கும் பூச்செடி ...
Read More »குழந்தைப் பாடல்: பொங்கல் திருநாள்
பொங்கல் திருவிழா வந்தது புதிய மகிழ்வைத் தந்தது சங்கத் தமிழர் பெருமையைத் தரணி புகழச் சொன்னது! உழவர் நாளாய் மலர்ந்தது உழைப்பின் அருமை புரிந்தது மண்ணில் விளைந்த நெல்மணி பானையில் பொங்குது கண்மணி! இல்லம் சிறக்கச் செய்தது இனிப்புப் பொங்கல் ஆனது உள்ளம் தேனாய் இனிக்கவே உறவுப் பொங்கல் ஆனது! சோலை மரங்கள் பூத்தன சொக்கப் பானைகள் எரித்தன பாலும் நெய்யும் சேர்ந்தது பாசப் பொங்கல் இனித்தது!
Read More »லஹிரு எவ்வாறு உயிரிழந்தார்? – சஷி வீரவன்ச சாட்சியம்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி பிரசாத் அல்விஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு மரண விசாரணையின் ஆரம்ப சாட்சி சஷி வீரவன்ச சாட்சியம் வழங்கினார். அவர் நீதிமன்றில் குறிப்பிட்டதாவது, “உயிரிழந்த லஹிரு எனது மகனின் நல்ல நண்பர். சில காலங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். பல நாட்கள் மகனுடன் இரவில் எங்கள் வீட்டில் தங்குவார்கள். அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற ...
Read More »யூடியூபிற்கு போட்டியாக புதிய களத்தில் கால்பதிக்கும் பேஸ்புக்
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு ...
Read More »அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த அவுஸ்ரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் ...
Read More »தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட நாயகி பார்வதி நாயர் தான் தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதிநாயர். இவர் நாளை வெளியாகும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். பார்த்திபன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவுடன் நடித்த அனுவம்பற்றி கூறிய பார்வதி நாயர்… “இந்த படத்தில் ‘மோகினி’ என்ற மலையாள பெண் கதாபாத்திரத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடித்து இருக்கிறேன். பார்த்திபன் சார் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் ...
Read More »சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள்!
சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, சித்திரவதை மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இரகசியப் பொலிஸார் சித்திரவதை முகாம் போன்று செயற்படுவதாகவும் அம்முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நான்காவது மாடி என அறிமுகமாகியுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவில், சித்திரவதை வழங்கப்படுவதாகவும், அதற்கான சாட்சிகள் பல உள்ளதாகவும் ...
Read More »