குமரன்

விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார்! – தமிழரசுக் கட்சி

முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.   விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சர்கார்!

தன் ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்ட கோபத்தில் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடும் இளைஞன், ஆட்சியில் அமர உள்ள கட்சியையே அசைத்துப் பார்த்தால் அதுவே ‘சர்கார்’. கார்ப்பரேட் உலகின் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் ஜி.எல். சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். விஜய்யின் வாக்கு இன்னொருவரால் கள்ள ஓட்டாகப் போடப்பட்டது தெரிந்ததும் அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கச் சொல்லி நீதிமன்றம் செல்கிறார். 49 (பி) பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி ...

Read More »

மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டி!

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டியில் Cross Counter என்ற குதிரை வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை Marmelo பெற்றுக்கொண்டது. அதேநேரம் A Prince of Arran என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது. மெல்பேர்ன் கிண்ண குதிரைப்பந்தயப் போட்டியானது அவுஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் போட்டி என வர்ணிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Read More »

நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி! -சட்டத்தரணி குருபரன்

19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்   வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன்  காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய அரசியலமைப்பில் இரண்டு தனித்தனியான இடங்களில் பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், பிரதமர் பதவியை இழப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நீக்கும், நியமிக்கும் ...

Read More »

அதி விசேட வர்த்­த­மா­னியை நீதி­மன்றில் சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது!

நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை பிற்போடும் வகையில் ஜனா­தி­பதி பிறப்­பித்த கட்­டளை அடங்­கிய அதி விசேட வர்த்­த­மா­னியை நீதி­மன்றில் சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது என சட்ட மா அதிபர் உயர் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார். சட்ட மா அதிபர் சார்பில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் இந்­திகா தேமுனி டி சில்வா இதனை உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். நாடாளு­மன்ற கூட்­டத்­தொ­டரை எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை ஒத்திவைத்து ஜனா­தி­பதி இட்ட கட்­டளை உள்­ள­டங்­கிய அதிவிசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்­யு­மாறு கோரி பொது நல வழக்­கு­களை தொடுக்கும் சட்­டத்­த­ரணி நாகா­நந்த ...

Read More »

சம்பந்தனை சந்திக்கிறார் புதிய அமெரிக்க தூதுவர்!

எதிர்க் கட்சித் தலைவரும் தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.   இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அதன்படி இச் சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

Read More »

நவுறு சிறுவர்களை அவுஸ்திரேலியா என்றும் ஏற்காது!

நவுறு சிறுவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இடம் கிடையாது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அகதிச்சிறுவர்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின் மீண்டும் நவுறு தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நவுறு தீவிலுள்ள அகதிச்சிறுவர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் பீட்டர் டட்டன் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

Read More »

இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் ...

Read More »

சமூக திரில்லர் படமாக உருவாகும் புளூவேல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரையும் பயமுறுத்திய புளூவேல் விளையாட்டு தற்போது சமூக திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் ...

Read More »

கேமரூனில் பள்ளி முதல்வர், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்!

கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர். அங்கு படித்து வந்த 10 முதல் 14 ...

Read More »