குமரன்

சுமந்திரனின் கனவும் ஒருபோதும் நிறைவேறாது! – சேஹான் சேமசிங்க

புதிய அரசியலமைப்பின் வரைபை மட்டுமல்ல அதன் யோசனைகளையும் கடுமையாக எதிர்ப்போம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க, நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக சித்தரிக்கப்படுகின்றார். எனவே அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் புதிய அரசியலமைப்பினை கோரும்  கூட்டமைப்பினர்   வடக்கு கிழக்கு உட்பட  நாட்டில் வாழும்  தமிழ்  மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு   தீர்வு காண இதுரையில் தமது எதிர்கட்சி பதவியை பயன்படுத்தவில்லை. வடக்கு மக்களும் புதிய அரசியலமைப்பை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய வானம்!

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரத்தில் வானம், ஆரஞ்சும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் டாஸ்மேனியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் புகைப் படலம் ஹோபார்ட் நகரத்தைச் சூழ்ந்தது. காட்டுத்தீ ஏற்பட்ட இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் ஹோபார்ட் அமைந்துள்ளது. எனினும் தீயின் புகை பரவி ஹோபார்ட்டையும் பாதித்தது. ஹோபார்ட் நகரவாசிகள், வானத்தைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். காட்டுத்தீ, ஹோபார்ட் நகரத்திற்குப் பரவாது என்றாலும் மூச்சுத்திணறல் நோய்களுடையவர்கள் புகையால் பாதிப்படையலாம் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். தீயின் காரணமாக யாருக்கும் காயங்கள் ...

Read More »

48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள்  – ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ...

Read More »

அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா?

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய ...

Read More »

ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கு சந்திரிக்கா முயற்சி!-ரவி

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க ,  சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் அழிப்பதற்கு முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சிங்கள மொழி வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வீரவணக்க நாள்!

சந்திரிக்கா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தியவரும், மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான  குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிக்கா அரசின் கொலையாளிகளால் 05.01.2000 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர்   குமார் பொன்னம்பலம் அவர்கள். இவரின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது. சந்திரிக்கா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை ...

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரிக்கை!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி உரித்து நிர்ணய திணைக்களம் சார்பாக,  மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூன்று மாத கால அவகாசத்தினை  கோரியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்காக மேலும் தெரிய வருகையில்,, கடந்த 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 13 வருடங்கள் ஆகியும்  தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் மன்னார் மாவட்டம் ...

Read More »

“புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம் செல்வாக்கு செலுத்தாது”!

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, புதன்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு ...

Read More »

அனைத்து மாகாணங்களுக்கும் ஆளுநர்கள் நியமனம்!

தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மாஷல் பெரேரா, வட மாகாணத்திற்கும், அசாத் சாலி கிழக்கு மாகாணத்திற்கும் நியமனம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நியமனம் பெறவுள்ள மாஷல் பெரேரா, டிலான் பெரேராவின் தந்தையென்பதுவும் குறிப்பிடதக்கது. இதேவேளை, கடந்த டிசம்பர் 31ஆம் நாளுடன் சகல ஆளு நர்களையும் ராஜினாமா செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?

பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என  இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர் ஜயந் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார் இந்திய விமானநிலைய அதிகாரசபை வெளிநாடுகளில் விமானநிலைய நிர்மாணிக்க விரும்புகின்றது எனினும் பலாலி தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும்  அனுமதிவழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார் பலாலியில் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட அறிக்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் இந்திய விமானநிலைய அதிகாரசபை இந்திய வெளிவிவகார அமைச்சுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டுள்ள போதிலும் வெளிவிவகார ...

Read More »