16 ஆண்டுகளில் மட்டும் 793 திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடைசெய்துள்ளதாக தகவல் உரிமை சட்ட தகவல் மூலம் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட இந்தியப் படங்களில், 231 இந்திப்படங்களும், 96 தமிழ்ப் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னடப் படங்களும், 23 ...
Read More »குமரன்
இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்!
இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையொட்டி இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும் பாகிஸ்தான் அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் ...
Read More »ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!
ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீதான காவல்துறையினரின் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கும் படி பொறுப்பிலிருக்கும் அனைத்து தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேவையான ‘டான் டிவி’ நிறுவனத்தின் செய்தியாளர் திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா குகராஜா காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 19 ம் திகதி2.30 மணியளவில் கொக்குவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை செய்திக்காக படமெடுத்துக் கொண்டிருக்கையில், ...
Read More »எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் !
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது எனக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்காரர்களை குறிவைத்து 15 நாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் அதிகமாக வெளியேறும் நாடுகளாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இடைப்பட்ட நாடுகளாக உள்ள இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இக் காணொளி பரப்பப்படுகின்றது. அந்த எச்சரிக்கை ...
Read More »தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி!
யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அதன் போது தாக்குதல் குழுவிடமிருந்து தப்பியோடியதையடுத்து சில நிமிடங்கள் குறித்த ...
Read More »ஊடகவியலாளரை தாக்கியமைக்காக காவல் துறைபொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொளிப் பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக காவல் துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு ...
Read More »சிரியாவில் பொதுமக்கள் பலி! ஐநா சபை கடும் கண்டனம்!
சிரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு நிகழ்த்தி பொதுமக்களை கொன்று குவித்த கொடூர செயலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா ...
Read More »மனைவியே மந்திரி: விழுதாகத் தாங்குபவர்! – ஆர்ஜே பாலாஜி
நானும் என் மனைவி திவ்யா நாகராஜனும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும்போதுதான், ‘இது நட்பு இல்லையோ?’ என்று தோன்றியது. படிக்கும்போதே திருமணம் கல்லூரி நாட்களில் ஜாலியாக இருப்பேன். என்னைப் பற்றி அவரது வீட்டில் விசாரித்தபோது, யாருமே நல்லவிதமாகச் சொல்லவில்லை. எங்கள் விஷயத்தை அவர் தன் வீட்டில் சொன்னதிலிருந்து ஒரு வருடத்துக்கு எங்கேயுமே அனுப்பவில்லை, போனையும் வாங்கிவைத்துக்கொண்டார்கள். அவர் ரொம்ப வைராக்கியத்துடன் இருந்தார். அவரைப் பார்க்க முடியாத தவிப்பு எனக்கு. சென்னையில் இருக்க வேண்டாம் என்று கோயம்புத்தூருக்கு மேற்படிப்புக்குச் ...
Read More »அவுஸ்திரேலியா சென்ற பிரித்தானியரும் பிரான்ஸ் நாட்டவரும் மாயம்!
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியரும் ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மாயமாகியுள்ளதையடுத்து அவுஸ்திரேலிய காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். Hugo Palmer மற்றும் Erwan Ferrieux என்னும் இருபது வயதுள்ள சுற்றுலாப்பயணிகள் இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சிட்னிக்கு வடக்கேயுள்ள கடற்கரை ஒன்றில் சில பொருட்கள் அநாதையாக கிடந்ததைக் கண்ட சிலர் காவல் துறைக்கு தகவல் அளிக்க, அங்கு வந்த காவல் துறை அவை Hugo Palmer மற்றும் Erwan Ferrieuxக்கு சொந்தமானவை என்பதை அறிந்தனர். சுற்றிலும் தேடியதில் அங்கு இருவரும் வாடகைக்கு ...
Read More »மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ...
Read More »