பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்றனர். அதை அறிந்த அவர் வீட்டில் இருந்த தனது ...
Read More »குமரன்
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிர்ப்பு!
கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் காற்றாலைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமமட்ட பொது அமைப்புக்கள் பிரதேசசபையின் தவிசாளர் ஆகியோரால் பூநகரிப் பிரதேசசெலாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் அரசமற்றும் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 1703 கெக்ரேயர் நிலப்பரப்பில் காற்றலை மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் பல்வேறுமட்டங்கடளிலும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த காற்றலை மின் உற்பத்திநிலையங்கள் காற்றாடிகள் அமைக்கப்படும் போதும் தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்தொழில் விவசாயம் கால்நடைவளர்ப்பு என்பவற்றில் பாதிப்புக்கள் ஏற்படும் ...
Read More »வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்!
சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நமது அரசியல்வாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக இன்று அவர் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் நாங்கள் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சாதித்தவைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏமாற்று அரசியல்வாதிகள் ...
Read More »உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா
நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, ...
Read More »ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட்!
ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில ...
Read More »பிரியா, நடேசலிங்கம் தம்பதி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க வாய்ப்பு கிட்டுமா?
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர், நாட்டிலேயே தங்கியிருக்க வாய்ப்பு கிட்டும் என்று அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் ஆகியோர் கடந்த ஒரு வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். வீசா முடிந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில் கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றால், இந்த குடும்பத்தினர் மீண்டும் குயின்ஸ்லாந்தில் சென்று வசிக்கக்கூடியதாக இருக்கும் ...
Read More »தீயில் கருகிய பிரான்ஸ் தேவாலயம் ! உலகமே அதிர்ச்சியில் ! பலர் அச்சத்தில் ! பலர் நிதியுதவி !
பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோட்ரே டோம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள சுமார் 850 வருடங்கள் பழமையான தேவாலயம் நோட்ரே டோம் தேவாலயம், பாரம்பரிய சின்னமாக திகழ்கின்றது. குறித்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் குறித்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. மெதுமெதுவாக பரவிய தீ, தேவாலயம் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதி கொடூரமாக கொலை!
வியட்நாமிய அகதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் தீவில் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட அகதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளர். சொந்த நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலிருப்பதாகக்கூறி அவுஸ்திரேலியாவுக்கு வந்த குறிப்பிட்ட வியட்நாமிய அகதி அவுஸ்திரேலிய குடிவரவுக்கொள்கையின் பிரகாரம் மனுஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். அங்கு முகாமிலும் வெளியிலும் வைக்கப்பட்டிருந்த இந்த வியட்நாமிய அகதி சுமார் ஐந்து வருடங்களாக தன்னை அகதியாக ஏற்றுக்கொண்டு தஞ்சமளிக்கும்படி அவுஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட ...
Read More »ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்த வேண்டிய தேவை கிடையாது!
ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்தவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. ஜனாதிபதியுடைய நிதி ஒதுக்கீட்டைக் கருத்திற் கொண்டு இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பில் நாம் கலந்து கொள்ளமல் இருந்தமைக்காகவே இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வரவு ...
Read More »வட மாகாண அபிவிருத்தி குறித்து கனடா – ஈரான்!
சிறிலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி உதவிகள் குறித்து இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை ஆளுநருக்கும் சிறிலங்காவுக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷேரி ஹமிரனி ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் கொழும்பிலுள்ள ...
Read More »