கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் காற்றாலைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமமட்ட பொது அமைப்புக்கள் பிரதேசசபையின் தவிசாளர் ஆகியோரால் பூநகரிப் பிரதேசசெலாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் அரசமற்றும் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 1703 கெக்ரேயர் நிலப்பரப்பில் காற்றலை மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் பல்வேறுமட்டங்கடளிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த காற்றலை மின் உற்பத்திநிலையங்கள் காற்றாடிகள் அமைக்கப்படும் போதும் தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்தொழில் விவசாயம் கால்நடைவளர்ப்பு என்பவற்றில் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் இதனால் தாங்கள் இந்தப் பிரதேசங்களைவிட்டு இடம்பெயரவேண்டியநிலை ஏற்படும் எனவும் கிராமமட்ட பொது அமைப்புக்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து பிரதேசசெயலரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
இதேவேளை பூநகரிப் பிரதேசசபையின் தவிசாளரினாலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.