அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர், நாட்டிலேயே தங்கியிருக்க வாய்ப்பு கிட்டும் என்று அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் ஆகியோர் கடந்த ஒரு வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
வீசா முடிந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொழில் கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றால், இந்த குடும்பத்தினர் மீண்டும் குயின்ஸ்லாந்தில் சென்று வசிக்கக்கூடியதாக இருக்கும் என அவுஸ்திரேலியாவின் தமிழ் சபை உறுப்பினர் ஆரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
வீசா முடிந்த இவர்கள் இருவரையும் நாட்டிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு கோரி 180,000 பேர் கையெழுத்திட்டு மனுக்களை கையளித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal