சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை. இது சும்மா பேச்சுக்காகப் பேசும் பேச்சு போலவே தெரிகிறது என்றார். சம்பந்தனின் தலைமைத்துவதின் கீழ் அவரது காலத்தில் தீர்வுகள் கிடைக்குமென்ற சாத்தியங்கள் தென்படவில்லை என்றும் கூறிய அவர், ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லையென்றார். கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர வாழ் மக்களின் நிதியுதவியுடன் நேற்று(03) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் ...
Read More »குமரன்
கமலைப் போல் என்னால் நடிக்க முடியாது !- விக்ரம்
கடாரம் கொண்டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால் என்னால் அவரை போல் நடிக்க முடியாது என தெரிவித்தார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஈழ தமிழ்ப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவர்?
வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஈழ பின்னணி கொண்ட தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக நம்பப்படுகிறது. கடந்த திங்களன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என்று கூறப்படும் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாரை அழைத்தார் என்று குயின்ஸ்லாந்து காவல் துறையினர் கூறியுள்ளார்கள். தேவகி என்ற 52 ...
Read More »பலமான கடவுச்சீட்டு பட்டியல்! முன்னேறியது அவுஸ்திரேலியா!
உலக அளவில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. இந்த தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா முன்னேரியுள்ளது. Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறித்த நாடுகள் இரண்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரஜை ஒருவர் விசா இன்றி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த பட்டியலுக்கமைய தென் கொரியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்போர் 187 நாடுகளுக்கு விசா ...
Read More »உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் முடங்கின!
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் இன்று பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ...
Read More »சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வேனை விடுவித்த நீதிமன்றம்!
சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு காவல் துறையால் மீட்கப்பட்ட டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது. சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரிகம பகுதிக்குச் சென்று ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த வேன் அண்மையில் காவல் துறையால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த ...
Read More »ஹிஸ்புல்லா குற்றத்தடுப்பு பிரிவில் வாக்குமூலம்!
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என்று முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாக ஏற்கனவே முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்று காலை 10 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவில் முன்னிலையாகியிருந்ததார் .
Read More »மைத்திரியின் பிடிவாதம்..!
சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள போதிலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண் டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் தளர்ச்சியைக் காண முடியவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கில் இட்டு தண்டிக்கின்ற நடைமுறை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மரண தண்டனைக்குப் பதிலாக அந்தக் கைதிகள் ஆயுட்கால சிறைத் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்கள். ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத் தீர்மானம் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்துள்ளது. எதிர்ப்புகள் இருந்த போதிலும், மரண தண்டனைக் கைதிகளை – குறிப்பாக போதைப் ...
Read More »பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன்!- அமலாபால்
விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபாலை சில தினங்களுக்கு முன்பு நீக்கினர். ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகள் சமீபத்தில் டிரெய்லரில் வெளியானது. இதனால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. தன்னை நீக்கியது தயாரிப்பாளரின் ஆணாதிக்க அகந்தையான மன நிலையை காட்டுகிறது என்று அமலாபால் கண்டித்தார். இந்தநிலையில் டைரக்டர் விஜய்யின் 2-வது திருமண தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் ...
Read More »சிட்னி நகரின் முக்கிய இடங்களை தகர்க்க திட்டமிட்ட ஐஎஸ்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் ...
Read More »