கடாரம் கொண்டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால் என்னால் அவரை போல் நடிக்க முடியாது என தெரிவித்தார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அக்ஷரா ஹாசன், இந்த கதாபாத்திரம் சவாலாக இருந்தது.. கடினமாக உழைத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், இது எனக்கு 25 படம், இதில் பல படங்களுக்கு கமல் சார் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்றார்.
படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா கூறுகையில், ராஜ் கமல் தயாரிப்பில் இது எனக்கு 2-வது படம். விக்ரம் எனக்கு இந்த படத்தில் நிறைய உதவி செய்தார். எனக்காக தான் இந்த படத்தை கமல் தயாரித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. விக்ரம் சார் படக்குழுவினரை குழந்தை போல் பார்த்துக்கொண்டார். என் குடும்பத்தினரை விட கமல் சார் என்னை ரொம்ப நம்புகிறார் என தெரிவித்தார்.
படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசுகையில், கமல் சார் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். நான் கமலின் தீவிர ரசிகன். 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால், என்னால் அவரை போல் நடிக்க முடியாது. என் ரோல் எனக்கு ரொம்ப பிடித்தது. ஜிப்ரான் திறமையாக இசையமைத்திருக்கிறார். சண்டை காட்சிகள் ஹாலிவுட் படம் போல் இருக்கும். செட் ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் எனக்கு மைல் கல்லாக அமையும் என குறிப்பிட்டார்.