அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள், பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில், மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும், ஒன்று. 2009இல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து – விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகப் பிரகடனம் செய்தவர்கள், அதில் நேரடியாகப் பங்களித்தவர்கள் அனைவரும் இப்போது நாட்டின் மிகமுக்கிய பதவிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்போது பிரதமராக இருக்கிறார். அப்போது பாதுகாப்புச் ...
Read More »குமரன்
ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான்
ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் ...
Read More »நடேசலிங்கம் – பிரியா தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் எழுத்து பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை!
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் ஈழ தமிழ் குடும்பத்தை தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்கள் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் கடலோர தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர். ஆகஸ்டில் மாற்றப்படுவதற்கு முன்னர், குடும்பம் மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் ...
Read More »ஈரான் மிரட்டல்: டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை!
ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் கலந்தாலோசித்தனர். ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது. சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ...
Read More »ஜெயலலிதா வேடத்திற்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டேன் – கங்கனா ரனாவத்
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா, தமிழ் பேசவும் பயிற்சி பெற்றார். ஜெயலலிதா போன்ற உடல்வாகை பெற, அவர் வழக்கத்தைவிட அதிக அளவு சாப்பிட்டதாகவும், சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் ...
Read More »சிதைவுறும் நம்பிக்கைகள்!
ஆட்சி மாற்றம் என்பது பக்கச்சார்பின்றி நேர்மையாக செயற்படும் அதிகாரிகளுக்கும், பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகளுக்கும் சிக்கலானதாகவே அமைந்து விடுவது வழக்கம். ஆட்சிமாறும் போது, சந்தர்ப்பத்துக்கேற்ப மாறி விடும் அதிகாரிகள் தப்பிக் கொள்வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்வார்கள். நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும், சிக்கலாகவே இருக்கும். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதிகாரிகள் பலருக்கு இடமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. பலருக்கு நல்ல பதவிகள் கிட்டி யிருக்கின்றன. ...
Read More »கடத்தப்பட்ட விவகாரம்: தீவிரமாக கவனம்!-அரசாங்கம் அறிவிப்பு!
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சிறிலங்கா ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, காவல் துறை திணைக்களத்தின் குற்றப் ...
Read More »சுவிஸ் தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம்!
அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை காவல் துறையிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர் எமது தாய்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
Read More »நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ ஆர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணி வரை இடம்பெற்றுள்ளதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்த 5 பேர் நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனைய 5 பேர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர். ...
Read More »அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்களை ஆஸ்திரேலிய அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது மருத்துவ வெளியேற்றச் சட்டம். இவ்வாறான தடுப்பு முகாம்கள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்து வருகிறது ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசாங்கம். இந்த சூழலில், நவுருவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு வெளியே ...
Read More »