முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் நான் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன். எனினும் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை மஹிந்த ...
Read More »குமரன்
பின்லேடன் மகன் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா!
சவுதி அரேபிய அரசு குடியுரிமையை ரத்து செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக்குழு பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய மகன் ஹம்ஸா பின்லேடன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஹம்ஸா ...
Read More »திருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டு!
சமீபத்தில் வெளியான ‘தாதா 87’ படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது. பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ...
Read More »யாழில் எழுச்சி கொண்ட பெண்கள்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நலலூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் முன்னியப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரிகை இசை முழங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட நிலையில் ...
Read More »தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு தேவை!
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதர்வா, தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை என்றார். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ...
Read More »போராட்டத்தை குழப்ப முயன்றமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரினார் சிறிதரன்!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி போராட்டத்தில் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பொலிசில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இம்முறைப்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அவசர அவசரமாக ஊடகவியலாளர்களை சந்தித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குழப்பங்களிற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய கவனயீா்ப்பு போராட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினா்கள் சிலா் குழுப்பம் விளைவித்தமை உண்மையே, என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், அவ்வாறு குழப்பம் விளைவித்தவா்களுக்கான தாம் ஊடகவியலாளா்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கூறியிருக்கின்றாா். கடந்த 28ம் திகதி ...
Read More »தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும்!
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்த்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் போரின் முடிவுக்குப் பின்னரான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் அதன் கவனத்தை மீண்டும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்தின் அக்கறைக்குரியவையாகும். விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் உட்பட பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் மனித உரிமைகள் பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறுவது குறித்து ...
Read More »அவுஸ்திரேலியாவில் புதிய அமைச்சரவை அதிரடியாக நியமனம்!
அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் (Scott Morrison), புதிய அமைச்சரவை நியமனம் குறித்து அறிவித்துள்ளார். செனட்டர் லிண்ட ரெனால்ட்ஸ் (Linda Reynolds), அவுஸ்திரேலியாவின் புதிய தற்காப்புத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியானது. வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல் (Liberal) கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன. மொரிஸ்ஸன் (Morrison) தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவுஸ்திரேலியத் ...
Read More »இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் – ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வந்த வேகத்தில் வெளியேறியபோதும், அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடினர். ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடைபெறுகிறது. டாஸ் ...
Read More »அபிநந்தனின் பாதுகாப்பிற்காக லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்!
அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில் தங்கியிருந்து ஆய்வு செய்தார். இரவு 10.30 மணிக்குதான் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றார். போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். பாகிஸ்தானியர்களிடம் சிக்கியதும் தாக்குதலுக்கு உள்ளான அபிநந்தன் பிறகு சுமூகமான முறையில் நடத்தப்பட்டார். வியாழக்கிழமை ...
Read More »