குமரன்

அகதிகள் பற்றிய விழிப்புணர்வு: நடந்து செல்லும் அமல்

இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் ...

Read More »

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் ...

Read More »

போராட்டங்களும் ஏமாற்றங்களும்

நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்‌ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது அந்தளவு கடுமையாக அடக்கப்படுவதில்லை. தெற்கே அதிபர்களும் ஆசிரியர்களும் ஆரம்பித்த போராட்டம், தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில், பல ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2011, 2012, ...

Read More »

யாழில் பேருந்து விபத்து: 24 ​பேர் படுகாயம்

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பேருந்து, கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பேருந்து மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

பரிசோதனை வர்த்தமானி அறிவித்தல்

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை, ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு 2000 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Read More »

மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா – பிரசன்னா

நட்சத்திர ஜோடியாக இருக்கும் சினேகா – பிரசன்னா தம்பதியினர், தங்களது மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா – சினேகா ஜோடி. இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று விஹான் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை பிரசன்னா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஒரு நாள் நீ என்னை ஒரு பெருமைமிக்க அப்பாவாக மாற்றுவாய் என்று தெரியும். பயமின்றி உயர செல் ...

Read More »

நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 344 பேரில் ஆகக்குறைந்தது 65 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். இந்தப்பின்னணியில் Dubbo ...

Read More »

சுகாதார அமைச்சு கைமாறுகிறது?

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் ...

Read More »

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ...

Read More »

சூர்யா படத்தில் இணைந்த ராதிகா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண்விஜய்யின் 33-வது படம் ஆகிய படங்களில் நடித்து வந்த ராதிகா தற்போது சூர்யா படத்தில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ...

Read More »