நட்சத்திர ஜோடியாக இருக்கும் சினேகா – பிரசன்னா தம்பதியினர், தங்களது மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா – சினேகா ஜோடி. இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று விஹான் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை பிரசன்னா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛ஒரு நாள் நீ என்னை ஒரு பெருமைமிக்க அப்பாவாக மாற்றுவாய் என்று தெரியும். பயமின்றி உயர செல் என் வீரனே. எப்போதும் உன் நண்பனாக இருப்பேன். அளவிடமுடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” என வாழ்த்தி உள்ளார். கூடவே தன் மகனை என் அவஞ்சர், ஸ்பைடி, என் இட்லி” என செல்லமாக பதிவிட்டுள்ளார்.
அதுபோல் நடிகை சினேகா, ‛‛என் அன்பு, என் மகிழ்ச்சி என் பலம், என் மகனுக்கு 6 வயதாகிறது. எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் நேசிக்க கற்று கொடுத்தாய், பொறுமையாக இருக்க கற்றுக் கொடுத்தாய், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் கண்ணா” என வாழ்த்தி உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal