இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவித்திருக்கின்றார். தமிழ், சிங்களப் புதுவருடத்தையொட்டி இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சூவான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, புதுவருடம் பிறந்துள்ள நிலையில், இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது ...
Read More »குமரன்
ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்தது ஏன்?
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ...
Read More »கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் பாதிப்பை ஏற்படுத்துமா?
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள, கனேடியத் தமிழரான ரோய் சமாதானம் தெரிவித்தார். மத்திய இலண்டன் – பிம்லிகோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில், ரோய் சமாதானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீவினிங் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய ஊடகவியலாளர் கற்கைநெறியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் எனக்கு, ரோய் சமாதானத்தைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலண்டனுக்கு ...
Read More »ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் !
WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவரின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். தமது மகன் கைது செய்யப்பட்ட விதம் கண்டு, தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலமாகத் தங்கியிருந்த அசாஞ்ச்சை சில நாள்களுக்கு முன்னர் காவல் துறை யினர் கைது செய்தனர். அசாஞ்ச் விவகாரத்தை, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பேன் கவனித்து வருகிறார். இதற்கு முன்பாக அசாஞ்ச்சைத் தன்னிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா கோரிக்கை விடுக்கப் போவதில்லை என்றும், அந்த விவகாரம், ...
Read More »யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலருக்கு பாதுகாப்பு தேவையா?
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு காவல் துறை பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கும் காவல் துறை திணைக்களத்துக்கும் கடிதம் எழுதியிருந்தனர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தான் ...
Read More »மீளக் குடியேறியும் அகதிகாளாக வாழும் மக்கள் !
யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே – 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய பாதுகாப்பற்ற குடிசைகளில் வசித்து வருகின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்தியாவிலிருந்தும் வந்து தமது சொந்த காணிகளில் மீளக் குடியமர்ந்த மக்களே இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மலசலகூடங்களோ, கிணறு வசதிகளோ, குடிநீர் வசதிகளோ, பாதுகாப்பான வீட்டு ...
Read More »வடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?
வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் ...
Read More »ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல், அமலாபால்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். ...
Read More »2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கல்லுடன் நால்வர் கைது!
ஹோமாகம பகுதியில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கல் ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்க விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த மாணிக்க கல்லுடன் அதன் உரிமையாளரையும் கடத்திச் சென்று 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நீர்கொழும்பு காவல் துறைக்கு முறைபாடு ஒன்று கிடைத்திருந்தது. அதனடிப்படையில் பேலியகொட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வைக்கால, ஹோமாகம, பங்கதெனிய ...
Read More »நேபாளத்தில் விமான விபத்து – 3 பேர் பலி!
நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். படுகாயம் அடைந்த ...
Read More »