மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் பிரபலங்கள் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரிக்க ஜியோ ஸ்டூடியோசுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!
மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul இதனை தெரிவித்துள்ளார். மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அங்கு தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்கள் என்றும் அவர்கள் தங்களுக்கான வழிகளை இதுபோன்ற சம்பவங்களின் ஊடாக நாடுவதற்கே விரும்புகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எந்தக்குற்றமும் செய்யாத அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்காக ...
Read More »சீனாவின் நிலைப்பாடு மாற்றத்திற்கு காரணமாய் அமைந்த இலங்கைக் குண்டுத்தாக்குதல்கள்!
பாக்கிஸ்தானின் ஜாய்ஷ் – இ – மொஹம்மட் இயக்கத்தின் தலைவர் மசூத் அஸ்கர் பாக்கிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் உரைகல்லாகவும், இந்தியா மீதான மறைமுகமான போரொன்றின் முகவராகவும் கடந்த ஒரு தசாப்த காலமாக விளங்கிவந்தார். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் தடைகள் கமிட்டி அவரை ஒரு உலகப்பயங்கரவாதி என்று நாமகரணம் சூட்டுவத்றகு முடிவெடுத்த போது, அதற்குச் சீனா இணங்கியதையடுத்து கடந்த புதன்கிழமை இவையனைத்தும் முடிவிற்கு வந்தன. மசூத் அஸ்கரை உலகப் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு ஐ.நாவில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சிகளுக்கு சீனா ...
Read More »யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையால் சுற்றிவளைக்கப்பட்டபோது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ...
Read More »குண்டை வெடிக்க வைத்து விட்டு உயிர் தப்பிய சஹ்ரான்! – அரச புலனாய்வாளர்கள்
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை ஜஹ்ரானே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஜஹ்ரானும் இன்னொரு தற்கொலை குண்டுதாரியும் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் ஆனால் ஜஹ்ரான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜஹ்ரான் குண்டொன்றை பொருத்தியிருக்கலாம் அல்லது தொலைவிலிருந்து அதனை வெடிக்க ...
Read More »நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்!
பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, தனது நீண்டநாள் காதலருடன் திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை அவர் உயர்த்தினார். அத்தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி ...
Read More »அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 20 கிலோகிராம் போதைப்பொருள் அந்தப் பொட்டலத்தில் அடங்கியிருந்தது. அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மெல்பர்ன் நகரின் மற்றொரு பகுதியில் 21 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Read More »பேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன?
ஆரவாரமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ள உலக பயங்கரவாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 அப்பாவிகளின் உயிர்களை கொடூரமாகக் குடித்திருக்கின்றது. பயங்கரவாதத்தின் இந்தப் பிரவேசம் குறித்து சர்வதேச உளவுத் தகவல்களின் மூலம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை நாட்டின் பாதுகாப்புத்துறை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய உளவுத் தகவல்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் உளவுத் தகவல்களும் கூடிய கால இடைவெளியில் பயங்கரவாதிகளின் உருவாக்கம் குறித்தும், அவர்களின் நோக்கங்கள் குறித்தும் தகவல்களை வழங்கியதுடன் எதிர்கால நிலைமைகள் குறித்த எச்சரிக்கையையும் விடுத்திருந்தன. இந்த ...
Read More »வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!
வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்!
கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என காவல் துறையினரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் காவல் துறையினu் குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கொழும்பை சுற்றியுள்ள காவல் துறையினநிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் மேலதிக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு கோரியுள்ளோம் என அதிகாரிகள் ஏஎவ்பீ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆறுகளில் படகுகளை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினரை கோரியுள்ளதாகவும்காவல் ...
Read More »