கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என காவல் துறையினரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் காவல் துறையினu் குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கொழும்பை சுற்றியுள்ள காவல் துறையினநிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் மேலதிக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துமாறு கோரியுள்ளோம் என அதிகாரிகள் ஏஎவ்பீ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.
ஆறுகளில் படகுகளை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினரை கோரியுள்ளதாகவும்காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் குழுவொன்று தாக்குதல்களை மேற்கொள்ள முயலக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் என ஏஎவ்பீ மேலும் தெரிவித்துள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் தீவிரவாதிகளிற்கு எதிராக மேற்கொள்ளாப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஆபத்தான நிலை முடிவிற்கு வந்துவிட்டது என குறிப்பிட முடியாது ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட நிலைமைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal