குமரன்

லசந்த விக்ரமதுங்க படுகொலை! -முன்னாள் ரி.ஐ.டி.பிரதானிகள் இருவருக்கு சிக்கல்!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சிகள் மற்றும் விடயங்களை குறித்த கொலை தொடர்பில்  முன்னர் விசாரணை செய்த ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் இருவர் மறைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரி.ஐ.டி.யின் முன்னாள் பிரதானி பிரதி காவல் துறை மா அதிபர் சந்ரா வாகிஸ்ட மற்றும் அப்போது அந்த  புலனாய்வுப் பிரிவின் உதவி காவல் துறை அத்தியட்சராக இருந்த பிரசன்ன அல்விஸ் ஆகியோர்  இந்த  நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளதாக தற்போது லசந்த விக்ரமதுங்க விவகாரத்தை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் ...

Read More »

நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!

கிளிநொச்சி மலையாளபுரம்  கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம்  திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு  கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து  குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில்  இருந்து வளர்ந்த பிள்ளைகள்  திருமணம் செய்த நிலையில் ...

Read More »

காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர். இதனால் மாநிலம் முழுவதும் கட்டுமானப்பணிகள் முடங்கி கிடக்கிறது. புல்வாமாவில் உள்ள கன்மோ தொழிற்பேட்டையில் மொத்தமுள்ள 200 யூனிட்டுகளும் ...

Read More »

5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த இந்திய வம்சாவளி டாக்ஸி ஓட்டுநர்!

ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் வந்தவரை இடித்து கீழே தள்ளிய வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தானதை அடுத்து 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குர்பேஜ் சிங் (29), 2017 டிசம்பரில் பிளின்டர்ஸ் தெருவில் இருந்து கண்காட்சி தெருவுக்கு திரும்பும்போது ஒரு சிக்னலில் சைக்கிள் வந்தரை இடித்து கீழே தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய சட்டப்படி இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களுக்கு 5 ஆண்டு சிறைத்தன்டனை அனுபவிக்க வேண்டிவரும். குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் ...

Read More »

‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’!

மதுரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் – இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள ...

Read More »

இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும் சுருதிஹாசன்!

நடிகை, பாடகர், இசை அமைப்பாளர் என பண்முகத்திறமை கொண்ட சுருதிஹாசன் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, சுருதி ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக, சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரது கைவசம், இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன. சற்று இடைவெளிக்கு பின், இந்தியில் ஒரு படத்திலும், ...

Read More »

யாழ்.ஊடகவியலாளர் சோபிதனிடம் காவல் துறை விசாரணை!

வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு  காவல் துறை  தலைமையகத்திற்கு இன்று  விசாரணைக்கு சமுகமளிக்குமாறு காவல் துறை  தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை ...

Read More »

ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் பணம் எவ்வளவு தெரியுமா ?

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேட்பாளர் எண்ணிக்கை கூடினால் தேர்தலுக்கான செலவு 4 பில்லியனில் இருந்து 5 பில்லியனாக அதிகரிக்கலாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை 23 வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் மற்றும் பிரசாரங்கள் ...

Read More »

இராக்கில் அரசு எதிரான வன்முறை: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு; 1500 பேர் காயம்!

இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1500 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறை காரணமாக இராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரசுக்கு ...

Read More »

மோடியின் அழைப்பை ஏற்ற ஆஸி.பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் டெல்லியில் ‘Raisina Dialogue 2020’ சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு உரையாற்ற இருக்கிறார் ஸ்காட் மோரிசன். இந்த நிகழ்வு அடுத்தம் வருடம் ஜனவரி மாதம் 14 தேதி முதல் ஜனவரி ...

Read More »