எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். இதற்காக என்னை கைது செய்ய முடியாது என உறுதியாகக் கூறியிருக்கின்றார். மூவாயிரம் படையினரை தாம் ஒரே இரவில் ஆனையிறவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு காவல் துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண, சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கருணா விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரால் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில், ...
Read More »குமரன்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்: வார்னர் சொல்கிறார்
டி20 உலக கோப்பை ரத்து செய்யப்பட்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) அதற்கு பதிலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும். 20 ஓவர் உலக ...
Read More »நியூசிலாந்தில் இந்தியாவில் இருந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா
இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. கொடூர கொரோனா தாக்குதல் நியூசிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 22 பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இதுவரை ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஆயிரத்து 482 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 ...
Read More »ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து பல போராட்டங்கள்!
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டல் நோக்கி ஊர்வலம் செல்வதற்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடியதால் பிரிஸ்பேன் நகரின் முக்கிய சாலை முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்பிற்கு ...
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த வாக்குறுதியிலிருந்து சிறிலங்கா பின்வாங்கியுள்ளது
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பதிலிருந்து சிறிலங்கா விலகிச்சென்றுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பான 2019 வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதியும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உத்தேச புதிய சட்டமூலத்தையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி சலுகையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போதும் ...
Read More »ஜூன் 27ஆம் திகதி திருமணம் செய்ய காரணம் என்ன?
ஜூன் 27ஆம் திகதி திருமணம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது 3-வது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். அந்த வீடியோவில் வனிதா விஜயகுமார் பேசியிருப்பதாவது, “எனக்கு 27-ம் தேதி திருமணம். ஏன் கொரோனா லாக்டவுனில் இந்த திருமணம் ...
Read More »சானியா மிர்சா, குழந்தையை சந்திக்க சோயிப் மாலிக் இந்தியா செல்கிறார்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதால் 5 மாதங்களுக்குப் பிறகு சானியா மிர்சா, குழந்தையை சந்திக்க சோயிப் மாலிக் இந்தியா செல்கிறார் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கொரோனா ஊரடங்கு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டபோது சோயிப் மாலிக் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இருந்தார். அவரது மனைவி சானியாவும், குழந்தையும் ஐதராபாத்தில் உள்ளனர். விசா அனுமதியின்மை, விமானப் போக்குவரத்து ...
Read More »லெமூறியா கண்டம் ஒன்று இருந்தது அதில் ஆதிக்குடிகள் தமிழர்கள்!
லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் என தமிழரசு கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை கண்டித்து ஊடகங்களுக்கு இன்று ...
Read More »சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் வேட்பாளர்கள்….!
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிபதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பது அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார் சமீபத்தில் ஆட்டநிர்ணய சதி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் எடுத்தால் அது ஒன்பது வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற விடயம் என தெரிவித்துள்ள மஞ்சுளகஜநாயக்க ...
Read More »தந்தையரை போற்றும் வகையில் ‘எந்தை’ 7 நிமிட குறும்படம்
சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது. வினிஷா விஷன் அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்ஸியின் நிர்வாக இயக்குநரான கே.வி.கதிரவன், டாக்டர் வினிஷா கதிரவன் பிரதானகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் டி.குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவும்,குமார் ஆன்லைன் எடிட்டிங்கும்செய்துள்ளனர். இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து கே.வி.கதிரவன் கூறியபோது, ‘‘இது ஒருநடுத்தர கிராமத்து விவசாயி குடும்பம் பற்றிய கதை. இயற்கையான சூழல், ஆரோக்கிய உணவுமுறையுடன் வாழ்க்கையை நகர்த்தும் அவர்கள், குழந்தைகள் கல்வி உள்ளிட்ட ...
Read More »