ஜூன் 27ஆம் திகதி திருமணம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது 3-வது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் வனிதா விஜயகுமார் பேசியிருப்பதாவது, “எனக்கு 27-ம் தேதி திருமணம். ஏன் கொரோனா லாக்டவுனில் இந்த திருமணம் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம். டிசம்பரில் அவரை இயக்குநராக சந்தித்தேன். ஹாலிவுட், பாலிவுட் எனது நிறைய தமிழ் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னால் என்னிடம் காதலை தெரிவித்தார். என் மகள் அதை ஏற்றுக் கொள்ளும்படி என்னிடம் கூறினார்.

ஜூன் 27-ம் திகதியை திருமண திகதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால். நான் எது செய்வதாக இருந்தாலும் என்னுடைய அம்மாவிடம் கேட்பேன். என் அம்மாவிடம் ஏதாவது சொல்லுங்கள் என்று நினைத்தபடி இருந்தேன். 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் என்னுடைய மொபைலை எடுத்து பார்த்த போது ஜூன் 27 என்ற திகதி மட்டும் கண்ணில் பட்டது. அப்போது நான் அழுதுவிட்டேன். அவரும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என்று விசாரித்தார். 27-ம் திகதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சட்டென கூறினேன். மகிழ்ச்சியடைந்த அவர் அதற்கு ஏன் அழுகிறாய் என்றார். நான் என் அம்மாவிடம் சம்மதம் கேட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஜூன் 27-ம் திகதி என் போனில் தெரிந்தது.
அந்த திகதி தான் என்னுடைய அம்மா – அப்பாவுடைய கல்யாண நாள். அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள். அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்” இவ்வாறு வனிதா அந்த காணொளியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal