எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். இதற்காக என்னை கைது செய்ய முடியாது என உறுதியாகக் கூறியிருக்கின்றார்.
மூவாயிரம் படையினரை தாம் ஒரே இரவில் ஆனையிறவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு காவல் துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண, சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து கருணா விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரால் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில், ;நான் சொன்னதெல்லாம் உண்மை. அந்த நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன். எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.
வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும். அரசியல் விதண்டாவாதிகளுக்கு இது புரியாது. நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். இதற்காக என்னை கைது செய்ய முடியாது என்றும் கருணா தெரிவித்திருக்கின்றார்.
Eelamurasu Australia Online News Portal