இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
கொடூர கொரோனா தாக்குதல் நியூசிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 22 பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இதுவரை ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஆயிரத்து 482 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. 2 வயது குழந்தையும், 59 வயது பெண்ணும் தான் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள். இருவரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை செய்வதால் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.