குமரன்

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு புதிய தடை!

ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பாரம்பட்சமிக்கது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது சமூகப் பிணைப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு. “விசா கோரி விண்ணப்பிப்பவரும், அவருக்கு ஸ்பான்சர் செய்பவரும் செயல்பாட்டு அளவிலான ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்,” எனக் ...

Read More »

இலங்கைத் தீவில் சர்வாதிகார பெரும்பான்மை ஆட்சி தலையெடுக்கிறது

ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சிங்களத் தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றிவாகும். மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் போர்க் கதாநாயகர்களாக சிங்கள-பௌத்த பெரும்பான்மையினால் கணிக்கப்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி மற்றும் ‘ஈஸ்ரர் 2019’ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற பாதுகாப்பு முன்னேற்பாட்டுக் குறைபாடு என்பன அதே ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் பதவியேற்பதற்குரிய வழியைத் திறந்துவிட்டிருந்தது. 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான சூழல், குடும்ப ஆட்சிக்கான அதிகாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது:பொதுஜன பெரமுன – இடதுசாரிக் ...

Read More »

“ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது”

” மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார். 0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்றிடையே இணைந்து செயற்படுவதற்கான உடன்பாடு ...

Read More »

வடக்கு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முல்லைத்தீவில் வடக்கு ஊடகவியலாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லை மாவட்ட செயலக முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்த வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பொலிஸ் நிலைய முன்றலில் முற்றுகையிட்டு கவனயீர்ப்பை செய்த பின்னர் முல்லைத்தீவு வனவள திணைக்கழத்துக்கு முன்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மரங்களையும் நாட்டியிருந்தனர். அத்துடன் ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

Read More »

ஆஸ்திரேலிய மக்கள் தொகையை விட அதிகமான பெண்கள் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர்!

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என  ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய ...

Read More »

முரளிதரன் நம்பிக்கை துரோகி…. அவர் வாழ்க்கை கதையில் நடிப்பதை தவிருங்கள் – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிப்பதை தவிர்க்குமாறு விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக ...

Read More »

கொரோனா வைரசுக்கான 2-வது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டோம் – அதிரவைக்கும் ரஷியா

கொரோனா வைரசுக்கு எதிராக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ ...

Read More »

ரிட்மனுவை தாக்கல் செய்தார் ரிசாத்

முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தன்னை அதிகாரிகள் கைதுசெய்வதை தடுப்பதற்காக நீதிமன்றில் ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளார். ரிசாத்பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே ரிசாத் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு காவல் துறை  குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More »

தாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்களவருடன் முரண்பட்ட அரச அதிபர் நீக்கம்!

மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற ...

Read More »

தமிழர் நாகரிகத்தின் தொன்மை வெளியாவதைத் தடுக்க சதியா?

கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் வெளியாவதில் காணப்படும் தாமதத்தைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித்திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ”தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும் அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் ...

Read More »