குமரன்

2021 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு

கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே இத் தொகை ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வின் ஜனாதிபதி செலவி னங்களுக்காக 934 கோடியே 5660000 ரூபாவும் ...

Read More »

ஆஸ்திரேலியா : வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதில் தாமதம்

ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் சோதனை முயற்சியாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை இத்தாமதம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார். கொரோனா சூழலுக்கு பிறகான 7 மாதக் காலத்தில் வெறும் 300 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வந்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளினால் ...

Read More »

நியூஸிலந்து, லத்தின் அமெரிக்காவின் உறைந்த இறைச்சியிலும் பொட்டலங்களிலும் கிருமித்தொற்று: சீனா

பிரேசில், பொலிவியா, நியூஸிலந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறைச்சியிலும் அதன் பொட்டலங்களிலும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதாகச் சீனாவின் ஜீனான் (Jinan) நகரம் கூறியுள்ளது. அந்தப் பொருள்கள் ஷங்ஹாய் மூலம் வந்தன. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சுமார் 7,500 பேருக்கும் கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. உறைந்த இறைச்சியில் பலமுறை கிருமித்தொற்று தென்பட்டதால் அவற்றின் பரிசோதனையைச் சீனா அதிகரித்துள்ளது. இறக்குமதித் தடைகளையும் அது விதித்திருக்கிறது. உறைந்த இறைச்சிப் பொருள்களிலிருந்து மனிதர்களுக்குக் கிருமி பரவும் சாத்தியம் மிகக்குறைவு என ...

Read More »

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்?

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்? என்று அமெரிக்க  வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் வேக்சின் எனப்படும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகின்றன. அதில் அமெரிக்க நாடும் ஒன்று. அமெரிக்காவில் உள்ள வான்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் வைத்தியர்கள்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து ...

Read More »

சிறிலங்காவில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு

திருகோணமலை சீனக்குடாவில்(China bay) உள்ள விமானப்படை அகடமியில் இன்று காலை சிறிலங்கா விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா  விமானப்படை அறிவித்துள்ளது.

Read More »

வடக்கில் மகாஜனா மாணவி முதலிடம்

நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை மகாஜனக் கல்லூரியிலிருந்து 36 பேர் சித்தி பெற்றுள்ளனர். வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ...

Read More »

எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார். இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். ...

Read More »

சீனா முன் அமெரிக்கா தோல்வி!

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே ...

Read More »

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா, இவரின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, தனது தந்தை கனடாவில் பணிபுரிவதாகவும், 10 ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை என்றும் உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார். இதையடுத்து அவரது தந்தை, பிக்பாஸ் வீட்டில் வந்து லாஸ்லியாவை சந்தித்த காட்சிகள் மனதை நெகிழ வைத்தது. அப்போது கவினுடனான காதல் விவகாரத்தில் அவர் தனது மகளை ...

Read More »

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர். சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற அப்துல் கலாமின் காட்சி பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன். அப்துல் கலாமாக ...

Read More »