பிரேசில், பொலிவியா, நியூஸிலந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறைச்சியிலும் அதன் பொட்டலங்களிலும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதாகச் சீனாவின் ஜீனான் (Jinan) நகரம் கூறியுள்ளது.
அந்தப் பொருள்கள் ஷங்ஹாய் மூலம் வந்தன.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சுமார் 7,500 பேருக்கும் கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.
உறைந்த இறைச்சியில் பலமுறை கிருமித்தொற்று தென்பட்டதால் அவற்றின் பரிசோதனையைச் சீனா அதிகரித்துள்ளது.
இறக்குமதித் தடைகளையும் அது விதித்திருக்கிறது.
உறைந்த இறைச்சிப் பொருள்களிலிருந்து மனிதர்களுக்குக் கிருமி பரவும் சாத்தியம் மிகக்குறைவு என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், தனது மாட்டிறைச்சியில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாகச் சீனா எந்தத் தகவலும் அளிக்கவில்லை என்று நியூஸிலந்து கூறியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal