குமரன்

சிறிலங்காவுக்கு எம்மால் சடலத்தைக் கொண்டுவரமுடியாது – அவுஸ்ரேலியா

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்கு கொண்டுசெல்வதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதனை பப்புவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ளவேண்டுமெனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்குக் கொண்டுவருவதற்கு 9ஆயிரம் அவுஸ்ரேலிய டொலரை வழங்குமாறு அவுஸ்ரேலிய தூதரகம் கோரியிருந்ததாக அவரது உறவினரான மதி என்பவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அவுஸ்ரேலிய ஊடகம், மனுஸ் தீவில் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் ...

Read More »

சக்தியாக அவதாரம் எடுத்த வரலட்சுமி

பிரியதர்ஷினி நடிப்பில் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சக்தியாக புதிய அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி எழுதி, இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருந்ததாக முன்னதாக பார்த்திருந்தோம். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு `சக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ...

Read More »

பிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் அறிமுக விழா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது. மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. கூகுளின் ஹார்டுவேர் விழாவில் பிக்சல் 2 ...

Read More »

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம்: மிட்செல்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 23-ம் திகதி பிரிஸ்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தற்போது அவுஸ்ரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள் முழு அளவில் தங்களை பட்டைத் தீட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் உள்ளூரில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்றுள்ளனர். ...

Read More »

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் உயிரிழந்த யாழ் இளைஞன்! -கண்டனங்கள்

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளின் உயிரிழப்பினைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த 32 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Read More »

வாட்ஸ்அப் சொந்த எமோஜி

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலிக்கு என பிரத்தியேக எமோஜிக்கள் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய எமோஜிக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வகை எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பில் சோதனை செய்யப்படும் புதிய வகை எமோஜிக்கள் ஆப்பிள் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஆப்பிள் போன்றே ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் தங்களுக்கென பிரத்தியேக எமோஜிக்கள் வழங்குகின்றன. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் புதிய எமோஜிக்கள் ஆப்பிள் வடிவமைப்பை சார்ந்து இருப்பதால், ஒரே ...

Read More »

ரஜினி, அஜித் பெருமைக்கு அவர்களின் பணிவே காரணம்: நயன்தாரா

ரஜினி, அஜித் பெருமைக்கு அவர்களின் பணிவே காரணம், அதனால் தான் இருவரும் பெரிய ஸ்டார்களாக திகழ்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா கூறியிருக்கிறார். தமிழ் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது ...

Read More »

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான ரஜீவ் ராஜேந்திரன் (வயது-32) என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை குறித்து ...

Read More »

மனுஸ் தீவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை ஒப்படைக்க 9ஆயிரம் டொலர் கேட்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம்!

மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழ் இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு 9ஆயிரம் டொலரை அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளதாக குறித்த இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளனர். மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2013ஆம் அண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் புகுந்த இவர் மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு தனது உடலுக்கு தானே தீங்கிளைக்க முற்பட்டவேளையில் உளவளச் சிகிச்சைக்காக மனுஸ்தீவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அவர் தனது ...

Read More »

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, இதனுடன் ...

Read More »