ரியல்மி விரைவில் வெளியிட இருக்கும் யு1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஒப்போ துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் அடுத்த வாரம் யு1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் திகதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியா மைதானத்தை கலக்கிய தமிழ் இளைஞர்கள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியை காண வந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் “டெல்டாவை பாதுகாப்போம், கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்” என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் இந்த செய்கையை கேமிராக்கள் ஆர்வத்துடன் படம் பிடித்துள்ளனர். இதன் மூலம் கஜா ...
Read More »சாகும் வரை உன்னைக் காதலிப்பேன்!-ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி தன் திருமண நாளில் கணவர் ராஜ் குந்த்ராவை வாழ்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷில்பா ஷெட்டி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உன் ஆச்சரியங்கள், செயல்கள், பெரிய மனதுக்கு ஈடாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான, சரியான ஜோடி. அதற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். சாகும் வரை உன்னைக் காதலிப்பேன். அதற்குப் பிறகு வாழ்க்கை இருக்குமென்றால் அப்போதும் காதலிப்பேன். மகிழ்ச்சியான 9-வது ...
Read More »நார்த் சென்டினல் தீவில் எத்தனைப் பழங்குடியினர் வசிக்கிறார்கள்?
அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இருக்கும் நார்த் சென்டினல் தீவில் சென்டினல்ஸ் பழங்குடியினர் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து 1967-ம் ஆண்டு அங்கு சென்று வந்த மானுடவியலாளர் டி.என் பண்டிட் சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார். நார்த் சென்டினல் தீவு அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி ...
Read More »ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே திறமை வாய்ந்தது- விராட்கோலி
ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 ...
Read More »நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்!
நியூசிலாந்தில் ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது. நியூசிலாந்தில் தென் தீவுக்கு அருகே 30 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இப்பகுதியில் ஏற்கனவே பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்தநிலையில் மீண்டும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்துள்ளது அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது. அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
Read More »சிறிலங்கா சபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்!
நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக சென்று இராகலை மேல் நகரதொகுதி சந்தியில் ...
Read More »மஹிந்தவுக்கு எதிரான மனு 3ஆம் திகதிக்கு முன் விசாரணை!
தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியும் அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த மனு 11.30- 12.03 க்கு இடையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (26) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ...
Read More »மாற்று அணி உடையுமா? ஒட்டுமா?
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று. மேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை ...
Read More »சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு பயணத் தடை!
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal