குமரன்

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்!

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை. இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங்கள் பல. இந்திய இழுவைப் படகுகளின் வருகை, மிகப்பாரிய சேதத்தை இலங்கையின் கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் ...

Read More »

முஸ்லிம்களே! உங்கள் சொந்த நாடுகளிலேயே இருங்கள்!

உலகநாடுகளில் உள்ள முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களை தங்கள் சொந்த நாடுகளிலேயேயிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். சிட்னியை சேர்ந்த மகிர் அப்சர் அலாம் என்ற ஐஎஸ் உறுப்பினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் குர்திஸ் ஆயுத குழுவினர் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி பகுதி மீது தாக்குதல் மேற்கொண்டவேளை மகிர் அலாமையும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைதுசெய்துள்ளனர். 24 வயது பல்கலைகழக மாணவரான அவர் 2014 இல் சிரியா சென்று ஐஎஸ் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய பிரயாண முகவர்!

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக 1.15 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய முகவர் மீது சண்டிகர் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. உள்ளூர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, ஹர்ஜீத் சிங் என்றவர் இவ்விவாகரம் தொடர்பாக மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், மார்ச் 2017ல் சண்டிகரில் உள்ள குளோபல் எஜூகேஷன் மற்றும் கேரியர் என்ற பயண ஏற்பாட்டு அலுவலகத்தை அணுகி, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசாவை பெற்றுத்தருமாறு கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு சம்மதித்த சாக்சி திர் என்ற முகவர் , நிரந்தரமாக ...

Read More »

கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை!-இளஞ்செழியன்

திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அரச பணம் 30 லட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த 30 லட்சத்துடன் மேலதிகமாக 90 லட்சத்தினை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read More »

நடிகராக அவதாரம் எடுத்த கார்த்திக் நரேன்!

துருவங்கள் பதினாறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நராகசூரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன் ...

Read More »

ஸ்ரீதேவியின் மாம் சீன மொழியில்!

ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்’ படத்தின் புதிய சீன   வெளியீட்டு திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், ...

Read More »

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு – ஆஸ்திரேலியர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ...

Read More »

ராஜீவ் காந்தி குண்டு துளைக்காத அங்கியை தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்தார்!-பண்ருட்டி எஸ்.இராமசந்திரன்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை – இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் ‘நியூஸ் டுடே” தொலைக்காட்சிக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் விசா கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அவுஸ்திரேலியாவுக்கான சகல விசா விண்ணப்ப கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிதிநிலை அறிக்கையின் கீழ் 5.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு அடுத்த நான்கு வருடங்களில் 275 மில்லியன்கள் இலாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாக்கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டீ-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் அணிகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரவுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி உத்தியோகத்தர்களுக்கான விசா விண்ணப்பத்தை கட்டணமில்லாமல் ...

Read More »

ஜனாதிபதி வாசஸ்தலத்துக்கு முன் உண்ணாவிரதம் இருந்தவர் விடுவிப்பு!

ஜனாதிபதி வாசஸ்தலத்துக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்பாக, இடையூறு விளைவிக்கும் வகையில் நடத்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், வாழைத்தோட்ட காவல் துறையால், அவர் கைதுசெய்யப்பட்டு, ​கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போ​தே, நீதவான் லங்கா ஜயரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டார். போதைப்பொருளைப் பயன்படுத்திவிட்டு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முன்பாக, வீதியை மறித்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றே ​பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு ...

Read More »