துருவங்கள் பதினாறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நராகசூரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணாடி’ என்கிற படத்தில் கார்த்திக் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இப்படம் தமிழில் கண்ணாடி என்ற பெயரிலும், தெலுங்கில் ‘நின்னு வீடனி நீடனு நேனே’ என்ற பெயரிலும் உருவாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal