குமரன்

இஸ்திரி போடும், ‘ரோபோ’

இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி ஈரத்துணியை கொடுத்தால், பக்காவாக, இஸ்திரி போட்டுத் தர, ஓர் இயந்திரம் வந்துவிட்டது. பிரிட்டனில் விற்பனைக்கு வரவுள்ள, ‘எப்பி’ (Effie) என்ற இஸ்திரி போடும் ரோபோ, சட்டை, பேன்ட், காலுறை, போர்வை என, சகல துணிகளையும் கையாளும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, பாலியஸ்டர், பருத்தி, பட்டு, விஸ்கோஸ், டெனிம் என, பல ரகத் துணிகளையும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை!

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம்!

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ்.மீசாலையைச் சேர்ந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவருடைய தாயும் தந்தையும் கண்ணீருடன் காத்திருந்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த ராஜேந்திரன் ராஜிப் 2003 ஆம் ஆண்டு மலேசியா சென்றதாகவும் பின் 11 ஆண்டுகள் தொடர்பு இன்றி இருந்துள்ளதாகவும் கூறினர். அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் தான் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம்!

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்கின்றனர். பின் இங்கே தமது மனைவியை அழைத்து வந்து நிர்கதிக்கு உள்ளாக்கி விடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தவிடயம் தொடர்பாக ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார். இதேவேளை வரதட்சணை விவகாரம் குடும்ப வன்முறையின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ...

Read More »

போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்! -காயத்ரி ரகுராம்

போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள் என்று கிண்டல் செய்தவர்கள் மீது காயத்ரி ரகுராம் கடும் சாடியிருக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறியதிலிருந்தே, சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவரை கிண்டல் செய்து வந்தார்கள். இதனால் அவ்வப்போது காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் கிண்டல்களும், மீம்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை கடுமையாக சாடி ட்வீட்களை பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதில் அவர் கூறியிருப்பதாவது: முகம் காட்டாமல் கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்புகிறேன். ...

Read More »

தானோட்டி கார்களுக்கான கணினி

கணினிகளின் மூளையான, சிலிக்கன் சில்லுகளை தயாரிக்கும், ‘என்விடியா’ செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை கையாளும், அதிதிறன் வாய்ந்த கணினிகளை தயாரிக்க உள்ளது. இந்த கணினிகள், தானோட்டி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகவே, உருவாக்கப்பட்டு உள்ளதாக, ‘என்விடியா’ அறிவித்துள்ளது. ‘டிரைவ் பி.எக்ஸ்., பிகாசஸ்’ என்ற, இந்த அதிதிறன் கணினிகள், தானோட்டி வாகனங்களில் உள்ள, கேமரா மற்றும் பல உணர்வான்கள் தரும் தகவல்களை, அதிவேகமாக பரிசீலித்து, உடனே முடிவுகள் எடுத்து, வாகனங்களை விபத்தில்லாமல் ஓட்டிச் செல்ல உதவும். தானோட்டி வாகனங்களில், ஐந்து நிலைகள் உள்ளன. இதில், நான்காம் நிலையில், 90 சதவீத ...

Read More »

அழிவை சந்திக்கப்போகிறது அவுஸ்திரேலியா: வடகொரியா

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா ஆதரிக்குமானால் அவுஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவுக்கு அவுஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne ஆகியோர் சென்றிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் அவுஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் சினத்தை உண்டுபண்ணியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வடகொரியாவின் வெளியுறவுத்துறை வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான K-C-N-A வழியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலம் உறவுகளிடம் கையளிப்பு!

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவருடைய சடலம் நேற்று (15) இரவு சிங்கப்பூரிலிருந்து எஸ்.கிவ்.468 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ...

Read More »

சம்பந்தன் கூறிய கருத்தை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது!

“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (16)தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

Read More »

விலைமாதுவாக நடிக்கும் சதா!

ஜெயம், அந்நியன் படங்களில் நடித்த சதா, தற்போது அப்துல்மஜித் இயக்கும் ‘டார்ச்லைட்’ என்னும் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார். தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் ...

Read More »