அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த யாழ்.மீசாலையைச் சேர்ந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவருடைய தாயும் தந்தையும் கண்ணீருடன் காத்திருந்துள்ளனர்.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த ராஜேந்திரன் ராஜிப் 2003 ஆம் ஆண்டு மலேசியா சென்றதாகவும் பின் 11 ஆண்டுகள் தொடர்பு இன்றி இருந்துள்ளதாகவும் கூறினர்.
அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பப்புவா நியூகினியா தடுப்பு முகாமில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தடுப்பு முகாமின் அருகாமையிஉலுள்ள வைத்தியசாலையில் ஊசி ஒன்று போடப்பபட்டதாக தெரிவித்தார்.
பின்னர் அவரிடமிருந்து தொடர்பு இல்லை. அதன்பிறகு கடந்த 2 ஆம் திகதி எம்மைத் தொடர்பு கொண்டு ராஜீவ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.ஆகவே அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதேவேளை மரணமடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.