குமரன்

சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவர மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வரை தற்போதைய தடை உத்தரவை நீடிப்பதாகவும் அவர் உத்தரவிட்டார். கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் ...

Read More »

கப்பல் விபத்து – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது. குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதி முதல் மாசடைந்த கடல் மற்றும் கடலோர பகுதியை சுத்தம் செய்வதற்காக மாத்திரம் குறித்த பணம் செலவிடப்படவிருப்பதாக. சூழல் பாதுகாப்பு ...

Read More »

நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் ‘அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு’ என்ற பாதையூடாகத் தமிழ்த் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்துவிடலாம் என்ற ஏமாற்று வித்தையாக அவர் உருவாக்கிய ஆபத்தான இணக்க அரசியலின் பிடிக்குள்ளேயே சுமந்திரன் அணி இன்று ஆழமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. 1985 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த தமிழரசுக்கட்சியினர் திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், அவர்களை விடவும் மீளமுடியாத தாழ்ந்த நிலைக்கு கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் ...

Read More »

சிட்னி விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆன்டனி அப்பாத்துரை ஒரு பாரிஸ்டாவைக் காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 73 வயதான குற்றவாளி, ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவ்வாறான முறைகேடான நடத்தையில் ஈடுபட்டமைக்காக 2022 டிசம்பர் 2022 வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 13 வயது சிறுவன், 26 வயது ...

Read More »

ஆஸ்திரேலியா: வெளிநாடுகளில் Sinopharm தடுப்பூசி போட்டுள்ள பெற்றோர் இங்கு வருவதில் சிக்கல்!

வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்களின் நெருங்கிய குடும்பத்தினர் அங்கு சில வகை கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் போது கட்டாயம் விடுதியில் தனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.

Read More »

மகளுக்காக புதிய முடிவு எடுத்த ஸ்ரேயா

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, தனது மகள் ராதாவுக்காக புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ...

Read More »

பெண்கள் மீதான தாக்குதல் சாத்தானுக்கு சமமானது- போப் பிரான்சிஸ்

பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வரவேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் போப் ஆண்டவரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளை கேட்டனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா என்ப வர் தனது நிலை பற்றி கூறினார். இதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதில் அளித்து பேசியதாவது:- பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து ...

Read More »

வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’

இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது அமைந்துவிடுகின்றது. அதேபோல், சீனநாட்டின் தூதுவரும் மேலாடை களைந்து வேட்டி கட்டி,  கந்தன் தரிசனம் பெற்று, கோவில் வாசலில் எடுத்த புகைப்படங்கள் வௌியாகியிருந்தன. வௌிநாட்டுத் தூதுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்வதொன்றும் புதிய விடயமல்ல! ஆகவே, சீன நாட்டின் தூதுவரின் வடக்குக்கான விஜயம் பற்றி, தனித்துக் குறிப்பிட வேண்டியது ...

Read More »

எரிவாயு வெடிப்புக்கான காரணம் வெளியானது

சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு அண்மையில் எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே காரணம் என, எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குறித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பொல இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சிலிண்டரில் இருந்த எரிவாயு சேர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்ததாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சேர்மானங்களில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த வெடிப்பு ...

Read More »