குமரன்

கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அணு ஆயுத ...

Read More »

எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் நம் மக்கள் முக்கியமா?

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து ...

Read More »

யாழில் இடியுடன் கூடிய மழை! நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி!

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறது. இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.  

Read More »

முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!

அண்மைக்காலமாக பல இடங்களில் சிறிலங்கா  படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சிறிலங்கா விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் ...

Read More »

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் பலவீனம் ...

Read More »

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு 200 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது bridging விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் ...

Read More »

மனோகணேசனிற்கு துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருக!

சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சரான மனோகணேசனிற்கு துணிவிருந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் , அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை ...

Read More »

நீர்­கொ­ழும்பில் நாளை நினை­வேந்­தல் நிகழ்வு!

இறு­திப் போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல் நிகழ்­வொன்று நாளை புதன்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக நடை­பெ­ற­வுள்­ளது. மக்­கள் உரி­மை­யைப் பாது­காக்­கும் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த நிகழ்­வுக்கு அர­சி­யல் கைதி­களை விடு­த­லை­ செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பும் தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளது. இன­வா­தத்­துக்­கும் போருக்­கும் எதி­ரான மக்­கள் இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­வேண்­டு­மென அந்த அமைப்­பின் இணைப்­பா­ளர் அருட்­தந்தை மா.சக்­தி­வேல் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

Read More »

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்!

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், இசட்5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார். புதிய டீசரில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 ...

Read More »

104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!

புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து துருக்கி  நீதிமன்றம் அளித்துள்ளது. துருக்கி நாட்டில் தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் திகதி அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் சிலர் புரட்சியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசாரின் ஒரு பிரிவினரும், அரசு ஊழியர்களும் உதவி செய்தனர். ஆனால், இந்த புரட்சி சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்டது. இதனால் ஆட்சி தப்பியது. இந்த புரட்சியில் அதிபருக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ...

Read More »