குமரன்

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம்!

புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதுடன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதும் நடந்துவருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் இறுக்கமாக்கப்படவுள்ளன. இந்த நிலைமைகளால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றியும் மற்றைய பாதுகாப்பு விசா ...

Read More »

உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?

பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி ...

Read More »

வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்! – த்ரிஷா

‘திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை’ என த்ரிஷா பேட்டி அளித்துள்ளார். த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கொடி’. தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ‘மோகினி’ ரிலீஸாக இருக்கிறது. மாதேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அவரிடம் உரையாடியதில் இருந்து… ‘மோகினி’ படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன? முதன்முறையாக வைஷ்ணவி, மோகினி என ...

Read More »

சிறைச்சாலையில் உள்ள மாற்றுத்திறனாளி முறைப்பாடு!

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி,  மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி​யே, யாழ். மனித உரிமைகள்  ஆணைக்குழுவின்  கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான, குமாரசாமி பிரபாகரன், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு, இடுப்புக்கு  கீழ் இயங்காது.  அவ்வாறான மாற்றுத்திறனாளியான தனக்கு, சிறைச்சாலையில்  அதற்குரிய  எவ்வித ஏற்பாடுகளும்  காணப்படவில்லை என்றும் மலசலம்கூட கழிக்க முடியாது, பெரும் அவஸ்த்தைபடுவதாகவும், இவை, தனது உரிமையைப் பாதித்துள்ளது எனவும் ...

Read More »

விஜயகலா தொடர்பில் ஐ.தே.கவின் தீர்மானம் தான் என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் கூடுகையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்குமென கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கட்சி அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதோடு,  அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய, அப்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் ...

Read More »

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது – பாம்பியோ குற்றச்சாட்டு!

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த ...

Read More »

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வு – நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்!

மன்னார் சதொச விற்பனை கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்கள் இருவர் இன்று புதன் கிழமை(25)காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில இன்று 41 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்களான கணபதிப்பிள்ளை வேந்தன்,ரகீம் மிராக் ஆகியோர் அகழ்வு இடம் பெறுகின்ற இடத்திற்குச் சென்று அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு,அகழ்வு பணிக்கு பொறுப்பாக ...

Read More »

துறைமுகம் சீனாவிற்கு விமான நிலையம் இந்தியாவிற்கு!-ராஜித

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட ...

Read More »

பிளாஸ்டிக்கை மட்கச் செய்யும் பாக்டீரியா!

குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால். இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது. அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் ...

Read More »